ADDED : நவ 14, 2025 11:26 PM

இ ந்தியாவில் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான எஸ்.பி.ஐ., பண்ட்ஸ் மேனேஜ்மென்ட், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 10,560 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி வர ஆலோசித்து வருகிறது.
எஸ்.பி.ஐ., மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான அமுண்டி எஸ்.ஏ.,வுக்கு சொந்தமான எஸ்.பி.ஐ.,பண்ட்ஸ், ஐ.பி.ஓ., வாயிலாக, 10 சதவீத பங்குகளை விற்க இருப்பதாக, கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
அடுத்தாண்டில் முதல் 6 மாதத்துக்குள் புதிய பங்கு வெளியீடுக்கு திட்டமிட்டுள்ள எஸ்.பி.ஐ., பண்ட்ஸ், வரும் வாரத்தில், இது தொடர்பாக வங்கிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
உலகளவில் புதிய பங்கு வெளியீட்டில், சுறுசுறுப்பான சந்தையாக திகழும் இந்தியாவில், இந்தாண்டு இதுவரை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1.58 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை திரட்டி உள்ளன. கடந்தாண்டு, 1.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு திரட்டப்பட்ட நிலையில், அதனை முறியடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

