உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 19, 2026 12:52 AM

அ நிறம் | அளவு
நிறுவனத்தின் நிதிநிலையை பலப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும், நடப்பு நிதியாண்டில் 60,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட'எஸ்.பி.ஐ.,' வங்கியின் மத்திய குழு கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் அல்லது வேறு மாற்றக்கூடிய நாணயங்களில் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்டகால கடன் பத்திரங்கள், ஏ.டி.,1 பாண்டுகள், ஏ.டி.,2 பாண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன் பத்திரங்களை பொது வெளியீடாகவோ, தனியார் முறையிலோ வெளியிட்டு நிதி திரட்டப்படும்.
கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7,500 கோடி ரூபாய்க்கும், 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 6,051 கோடி ரூபாய்க்கும் கடன் பத்திரங்களை எஸ்.பி.ஐ., வெளியிட்டது. இரண்டுக்குமே முதலீட்டாளர்கள் பெரிய வரவேற்பை அளித்திருந்தனர்.
