ADDED : ஜூன் 14, 2026 01:35 AM

பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
பான்பிக்லியோலி
டிரான்ஸ்மிஷன்ஸ்: தொழில்துறை ஆட்டோமேஷன், விண்டு எனர்ஜி மற்றும் ஆப்
- ஹைவே மொபிலிட்டி ஆகிய துறைகளுக்கான கியர்பாக்ஸ் மற்றும் டிரைவ்
சிஸ்டம்களை தயாரிக்கும் இந்த பொறியியல் நிறுவனம், முற்றிலும்
'ஆபர் பார் சேல்' முறையில் 2,000 கோடி ரூபாய் திரட்ட
திட்டமிட்டுள்ளது. இதன் இத்தாலிய தாய் நிறுவனமான
'பான்பிக்லியோலி எஸ்.பி.ஏ.,' தன் 4.70 கோடி பங்குகளை விற்பனை
செய்வதால், திரட்டப்படும் முழு தொகையும் தாய் நிறுவனத்திற்கே
செல்லும்.
பாம்பே கோட்டடு அண்டு ஸ்பெஷல் ஸ்டீல்ஸ்:
ஸ்டீல் காயில்களை
மதிப்பு கூட்டப்பட்ட பிராசஸ்டு ஸ்டீல் தயாரிப்புகளாக மாற்றும்
தொழிலில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 191 கோடி
ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தின்
கடன்களை அடைக்கவும், சீமென்ஸ் பைனான்சியல் சர்வீசஸ்
நிறுவனத்துடனான லீஸ்ஒப்பந்தத்தின் கீழ் மூலதனஉபகரணங்களை வாங்கவும் மற்றும் பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
ஸ்வராஜ்
கிரீன் பவர் அண்டு ப்யூயல்:
சர்க்கரை தயாரிப்பு மற்றும் எத்தனால்
உற்பத்தியில் ஒருங்கிணைந்து செயல்படும் இந்நிறுவனத்தின்
ஐ.பி.ஓ., வெளியீட்டிற்கும் செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த
மூன்று நிறுவனங்களின் பங்குகளும் பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ.,
ஆகிய இரண்டு சந்தைகளிலும் பட்டியலிடப்பட உள்ளன.
