ADDED : ஜூன் 14, 2026 01:29 AM

'கிரெட்' நிறுவனம் தனது பயனர்கள் எளிதாக கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்துவதற்காக, 'மல்டிபில்', 'ஆட்டோபே' ஆகிய இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலரும் ரிவார்டுகளுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளனர். அனைத்து கார்டுகளுக்குமான பில்களை ஒருங்கிணைத்து, ஒரே கட்டணமாக செலுத்துவதற்கு மல்டிபில் வசதி உதவும்.பயனர்கள் எந்தெந்த கார்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமோ, அவற்றை தேர்வு செய்து ஒருங்கிணைத்து ஒரே கட்டணமாக செலுத்திவிடலாம்.
ஆட்டோபே வசதி வாயிலாக, பயனர்கள் கிரெடிட் கார்டு கட்டணங்களை 'ஆட்டோமேட்டிக்' முறையில் செலுத்தலாம். ஒவ்வொரு மாதமும் எந்த தேதியில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டால் போதும். ஒரு பில் கட்டணத்துக்கு அதிகபட்ச உச்சவரம்பு 2 லட்சம் ரூபாய். தேவைக்கு ஏற்ப கிரெட் செயலியிலேயே ஆட்டோபே முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
