அன்னிய முதலீட்டாளர்களின் கே.ஒய்.சி., விதிகளை எளிமையாக்கும் செபி
அன்னிய முதலீட்டாளர்களின் கே.ஒய்.சி., விதிகளை எளிமையாக்கும் செபி
ADDED : ஜூன் 14, 2026 01:27 AM

அன்னிய முதலீட்டாளர் களுக்கான 'கே.ஒய்.சி.,' விதிமுறைகளை எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.அன்னிய முதலீடுகளை
ஈர்ப்பதற்காக, ஏற்கனவே கடன் பத்திர முதலீட்டில் அன்னிய
முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், அன்னிய முதலீட்டாளர்களுக்கு கே.ஒய்.சி., விதிகள்
எளிமைப்படுத்தப்படும் என்று செபி தலைவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
மற்ற
ஒழுங்குமுறை அமைப்புகளுடன் ஆலோசித்து, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான
கே.ஒய்.சி., விதிமுறைகளும் எளிமைப்படுத்தப் படும். அன்னிய முதலீட்டாளர்
களுக்கான தகவல் வெளியீடு விதிமுறைகளையும் ரிஸ்க் அடிப்படையில்
மாற்ற திட்டமிட்டு உள்ளோம். நிச்சயமற்ற காலங்களில், அன்னிய முதலீட்டாளர்கள்
எதிர்பார்க்கும் தெளிவை ஏற்படுத்துவோம். தெளிவான செயல்முறைகளால் வேகமாக முதலீடுகள் வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீண்டகால எப் அண்டு ஓ.,செபியின் புதிய முயற்சி
பங்கு சந்தையை பலப்படுத்தும் முயற்சியாக, நீண்டகால எப் அண்டு ஓ., ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்துவது பற்றி செபி பரிசீலித்து வருவதாகவும் துஹின் காந்த பாண்டே தெரிவித்துஉள்ளார்.
சந்தையில் பங்கேற்பை விரிவுபடுத்துவதிலும், ரிஸ்க் மேலாண்மையை
மேம்படுத்துவதிலும் நீண்டகால எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் முக்கிய
பங்களிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
