68 முதலீட்டு ஆலோசகர்கள் பதிவை ரத்து செய்தது செபி
68 முதலீட்டு ஆலோசகர்கள் பதிவை ரத்து செய்தது செபி
ADDED : நவ 28, 2025 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செ பி, 68 முதலீட்டு ஆலோசகர்களின் பதிவை ரத்து செய்துள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செலுத்த வேண்டிய புதுப்பிப்புக் கட்டணத்தை செலுத்தத் தவறிய காரணத்தை முன்னிட்டு, பதிவை ரத்து செய்திருப் பதாக செபி தெரிவித்துள்ளது.
இதில் 17 பேர், தாமாகவே முன்வந்து பதிவை ரத்து செய்ய கேட்டுக்கொண்டவர்களாவர். மீதமுள்ள 58 பேர், செபியின் நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, 68 பேர் பதிவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்து நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

