வாரிசுகளுக்கு பங்குகளை மாற்றும் நடைமுறையை செபி எளிதாக்கியது
வாரிசுகளுக்கு பங்குகளை மாற்றும் நடைமுறையை செபி எளிதாக்கியது
ADDED : ஜூலை 24, 2026 02:21 AM

முதலீட்டாளர் இறந்த பிறகு, அவரது பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளை வாரிசுகள் அல்லது நியமிக்கப்பட்டவரின் பெயருக்கு மாற்றும் நடைமுறையை எளிதாக்கி, செபி புதிய சுற்றறிக்கையை வெளி யிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை, 'பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பங்கு பரிமாற்ற பதிவாளர்கள், டிபாசிட்டரிகள், டிபாசிட்டரி பங்கேற்பாளர்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்' உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்
குறைந்த மதிப்புள்ள கோரிக் கைகளுக்கு 'விரைவு உரிமை மாற்ற நடைமுறை' அறிமுகம்
ரூ.10 லட்சம் வரையிலான பங்குச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.30 லட்சம் வரையிலான டிமேட் பங்குகளுக்கும் எளிய ஆவண முறையில் உரிமை மாற்றம்
உயிலுக்கான நீதிமன்ற உறுதிப் படுத்தல் கட்டாயம் என்பது நீக்கம்
தனித்தனி உறுதிமொழி மற்றும் தடையில்லா சான்றிதழுக்கு பதிலாக, ஒருங்கிணைந்த உறுதிமொழி-தடையில்லா சான்றிதழ் போதுமானது
கியூ.ஆர்., கோடு கொண்ட இறப்புச் சான்றிதழும் ஏற்கப்படும்
தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்த பிறகு, உரிமை மாற்ற கோரிக்கையை 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்
புதிய நடைமுறை, சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும்.
