அன்னிய முதலீட்டாளர்களுக்கு விதிகளை எளிதாக்கும் செபி
அன்னிய முதலீட்டாளர்களுக்கு விதிகளை எளிதாக்கும் செபி
UPDATED : நவ 23, 2026 12:00 AM
ADDED : நவ 22, 2026 10:30 PM

இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான ‘கூடுதல் வெளிப்படைத்தன்மை விதிமுறைகளை’ முழுமையாக ரத்து செய்ய செபி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கலந்தாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ள செபி, டிசம்பர் 11ம் தேதிக்குள் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் கருத்துகளை கோரியுள்ளது.
தற்போதைய விதிமுறைப்படி, மொத்த இந்திய பங்கு முதலீட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் ஒரே நிறுவன குழுமத்தில் முதலீடு செய்திருப்பது; அல்லது தனிப்பட்ட முறையிலோ, குழுமமாகவோ இந்திய பங்குகளில் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு வைத்திருப்பது என இரு வரம்புகள் உள்ளன.
இந்த இரு வரம்புகளில் ஏதேனும் ஒன்றை தாண்டும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், தங்களது நிதியில் உரிமை மற்றும் பங்கு கொண்ட அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் முழு விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த இரு நிபந்தனைகளும் தற்போது நீக்கப்பட உள்ளன. செபியின் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அன்னிய முதலீட்டாளர்கள் கூடுதல் நடைமுறை சிக்கல்களின்றி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிதாகும்.
