மடைமாற்றப்பட்ட ரூ.100 கோடி மோசடியை விசாரிக்கிறது செபி
மடைமாற்றப்பட்ட ரூ.100 கோடி மோசடியை விசாரிக்கிறது செபி
ADDED : நவ 11, 2025 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.பி.ஓ., வாயிலாக சிறு நிறுவனங்கள் திரட்டிய 100 கோடி ரூபாயை, தாங்கள் சொன்ன காரணங்களுக்காக பயன்படுத்தாமல் மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக செபி தெரிவித்து ள்ளது.
கிட்டத்தட்ட 20 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டிய நிதியை, உரிய காரணத்துக்கு அல்லாமல் வேறு விதமாக பயன்படுத்தியது தெரியவந்திருப்பதாக அது கூறியுள்ளது.
குறிப்பாக, போலியாக பில் போட்டு பணத்தை எடுத்தல், ஐ.பி.ஓ., முடிந்த சில நாட்களிலேயே எக்ஸ்ரோ கணக்கில் இருந்த பணத்தை, சட்டவிரோதமாக வேறு கணக்கிற்கு மாற்றுதல் போன்ற மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
பர்ஸ்ட் ஓவர்சீஸ் கேபிடல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வாயிலாக தான் இந்த ஐ.பி.ஓ.,கள் வெளியிடப்பட்டன. எனவே, விதிமீறல்களுக்காக இந்நிறுவனம் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளது.

