ADDED : நவ 23, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மி யூச்சுவல் பண்டு மற்றும் பங்கு தரகு கட்டணங்களை மாற்றியமைக்க, செபி திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 17ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், மொத்த செலவு விகிதம் பற்றிய புதிய மற்றும் தெளிவான வரையறையை கொண்டுவர உள்ளதாகவும் தெரிகிறது.
பங்கு பரிவர்த்தனை வரி, ஜி.எஸ்.டி., கமாடிட்டி பரிவர்த்தனை வரி உள்ளிட்டவற்றை, மொத்த செலவு விகிதத்தில் இருந்து விலக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என, செபி முன்மொழிந்திருந்தது.
இந்த மாற்றங்கள் குறித்து, பொதுமக்களின் கருத்துகளைத் தெரிவிக்க, கடந்த 17ஆம் தேதி காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்போது நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

