உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 05, 2026 10:24 PM

அ நிறம் | அளவு
வரும் ஏப்ரல் 1, 2027 முதல் மியூச்சுவல் பண்டுகள் பங்கு வர்த்தகத்துக்கான பண பரிவர்த்தனைகளை நிகர முறையில் தீர்த்துக்கொள்ள செபி அனுமதி வழங்கியுள்ளது.
உதாரணமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை 10 கோடி ரூபாய்க்கு வாங்கி, மற்றொரு நிறுவனத்தின் பங்குகளை 7 கோடி ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
மொத்த முறையில் முதல் பரிவர்த்தனைக்கு மொத்த 10 கோடி ரூபாய் செலுத்தி, இரண்டாம் பரிவர்த்தனைக்கு தனியாக 7 கோடி ரூபாய் பெறப்படும். நிகர முறையை பொறுத்தவரை இரண்டு பரிவர்த்தனைகளை யும் ஈடு செய்து, 3 கோடி ரூபாயை மட்டும் செலுத்தினால் போதும்.
