டெக்னிக்கல் அனாலிசிஸ் : ரெசிஸ்டென்ஸை தாண்டினால் ஏற்றம் தொடரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : ரெசிஸ்டென்ஸை தாண்டினால் ஏற்றம் தொடரலாம்
UPDATED : நவ 06, 2026 01:13 AM
ADDED : நவ 05, 2026 10:24 PM

நிப்டி வலுவான புல்லிஷ் கேண்டிலுடன் முக்கிய குறுகிய கால மற்றும் நடுத்தர கால 'மூவிங் ஆவரேஜ்'களுக்கு மேலே 24,536ல் நிறைவடைந்துள்ளது. இது டெக்னிக்கலாக ஏற்றம் தொடர வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., அதன் சிக்னல் லைனுக்கு மேலே இருப்பதுடன், பாசிட்டிவ் டைவர்ஜன்ஸும் அதிகரித்து வருவதால் புல்லிஷ் மொமென்டம் வலுப்பெறுகிறது. ஆர்.ஓ.சி.,யும் பாசிட்டிவ் நிலையில் இருப்பதால் நிப்டியின் நகர்வில் ஏற்றம் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், ஆர்.எஸ்.ஐ., 'ஓவர்பாட்' நிலையை எட்டியுள்ளது.
ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டரும், பாஸ்ட் ஸ்டோக்காஸ்டிக்கும் ஓவர்பாட் நிலையை உறுதி செய்கிறன. ஏற்றம் வலுவாக இருந்தாலும், டெக்னிக்கலாக எப்போது வேண்டுமானாலும் 'பிராபிட் புக்கிங்' வரக்கூடும் என்ற எச்சரிக்கையை இது உணர்த்துகிறது. வாங்கும் அழுத்தத்தை காட்டும் +டி.ஐ., விற்பனை அழுத்தத்தை காட்டும் -டி.ஐ.,யை விட கணிசமாக அதிகமாக உள்ளது. மேலும், ஏ.டி.எக்ஸ்., வலுவான டிரெண்டை காட்டுகிறது. இதனால் பெரும்பாலான டெக்னிக்கல் விஷயங்கள் ஏற்றத்துக்கு சாதகமாக உள்ளன.
இருப்பினும், நிப்டி 24,580க்கு மேலே சென்று நிலைத்தால் மட்டுமே தற்போது நடைபெறும் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 24,362, 24,187 மற்றும் 24,079 ஆகிய நிலைகளில் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலைகளையும் கடந்து இறக்கம் தொடர்ந்தால், ஒன்பது நாள் இ.எம்.ஏ., லெவலான 23,541தான் அடுத்த முக்கிய ஆதரவு நிலையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏற்றம் தொடரும் பட்சத்தில் 24,646, 24,755 மற்றும் 24,863 ஆகிய நிலைகளில் ரெசிஸ்டென்ஸை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் | 5.11.26 இறுதி விலை | கவனிக்க வேண்டிய விலை | டெக்னிக்கல் சப்போர்ட் | டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் | டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
பேங்க் ஆப் பரோடா (எம்.ஏ.சி.டி.,(12,26) :2.52 ஆர்.ஓ.சி., :4.82 ஆர்.எஸ்.ஐ., :64.43) | 249.67 | 247 | 244 | 252 | 1, 2, 4, 5
இ.பி.எல்., (எம்.ஏ.சி.டி.,(12,26) :-3.45 ஆர்.ஓ.சி., :-0.61 ஆர்.எஸ்.ஐ., :51.86) | 228.50 | 224 | 219 | 238 | 1, 4
ஹிமாத்சிங்கா செய்ட் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-1.94 ஆர்.ஓ.சி., :2.23 ஆர்.எஸ்.ஐ., :52.28) | 59.90 | 59 | 57 | 64 | 4
சாம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் (எம்.ஏ.சி.டி.,(12,26) :0.44 ஆர்.ஓ.சி., :6.23 ஆர்.எஸ்.ஐ., :63.09) 168.00 163 157 171 3, 4
டாடா ஸ்டீல் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-0.86 ஆர்.ஓ.சி., :4.57 ஆர்.எஸ்.ஐ., :59.20) 182.00 180 178 185 4

