ADDED : செப் 17, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி, காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய அமைப்புகள் ஆகியவை, விவசாயம் அல்லாத பிற பொருட்களின் முன்பேர வணிகத்தில் முதலீடு செய்ய அனுமதிப்பதற்கு செபி ஆர்வம் காட்டியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுடன் பேச்சு நடத்த உள்ளதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அன்னிய முதலீட்டாளர்களையும் விவசாயம் அல்லாத பொருட்களின் முன்பேர வணிகப் பிரிவில் வர்த்தகம் செய்ய அனுமதிப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், நடப்பாண்டு டிசம்பர் மாதத்துக்குள், அனைத்து தரகர்களுக்கும் உள்ள பொதுவான அறிக்கை சமர்ப்பிக்கும் முறையில், கமாடிட்டி வர்த்தக தரகர்களையும் இணைக்க உள்ளதாக அவர் கூறினார்.