ADDED : நவ 21, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ டுத்த ஆண்டு இறுதிக்குள், சென்செக்ஸ் 94,000 புள்ளிகளை எட்டும் என, சர்வதேச தரகு நிறுவனமான எச்.எஸ்.பி.சி., கணித்துள்ளது. சீன பங்குச் சந்தையுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தையில் உள்ள நிறுவன பங்குகளின் மதிப்பு குறைவாக இருப்பதாக, அந்நிறுவனம் கூறியுள்ளது.
நடப்பாண்டில், ஆசிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தைகள் சற்று பின்தங்கியுள்ளன. நிறுவனங்களின் வருவாய் சற்று குறைந்தது, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவையே இதற்கு காரணம் என எச்.எஸ்.பி.சி., தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஓராண்டுக்குள் சென்செக்ஸ் 1,07,000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளதாக, மற்றொரு சர்வதேச தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மதிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

