வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தினால் குறுகிய கால பத்திரங்களுக்கு பாதிப்பு
வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தினால் குறுகிய கால பத்திரங்களுக்கு பாதிப்பு
UPDATED : நவ 11, 2026 02:42 PM
ADDED : நவ 09, 2026 10:06 PM
ஆர்.பி.ஐ., வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, குறுகிய கால பத்திரங்கள்; நீண்ட கால பத்திரங்களை விட செயல்பாட்டில் பின்தங்க கூடும் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பணப்புழக்கம் குறைந்து வருவதும், பணவீக்கம் அதிகரித்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
கவனிக்க வேண்டியவை
'ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் மற்றும் டாய்ச்சி் வங்கி' கணிப்புகளின்படி, ரிசர்வ் வங்கி, வரவிருக்கும் மாதங்களில் வட்டி விகிதங்களை மேலும், 0.75 சதவீத அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு
ரிசர்வ் வங்கி மேற்கொண்ட 'ஓப்பன் மார்க்கெட்' பத்திர விற்பனை மற்றும் 'கரன்சி ஸ்வாப்' நடவடிக்கைகள் வாயிலாக, வங்கிகளில் இருந்த அதிகப்படியான பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனால், குறுகிய கால பத்திரங்களின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது
இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் மேல் வரம்பான 6 சதவீதத்தை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வருகிற டிசம்பர் மாத கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வுக்கான வாய்ப்பை வலுப்படுத்துகிறது
ஓராண்டுக்குள் முதிர்வடையும் கருவூல பத்திரங்கள் கடந்த ஒரு ஆண்டிற்கான உச்ச நிலைக்கு அருகில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
