UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:06 PM

ம திப்புமிக்க உலோகங்கள் விலை சரிந்து வரும் நிலையில், வெள்ளி விலை 11 மாதங்களில் இல்லாத சரிவை எட்டியுள்ளது.
எம்.சி.எக்ஸ்., சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சம் ரூபாய்க்கு கீழே இறங்கி இருந்தது. அதிகபட்சமாக 1,92,800 ரூபாய் வரை விலை சரிந்தது. கடந்த ஜனவரி 29ம் தேதி 4,20,048 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்சத்தை வெள்ளி தொட்டது. அந்த உச்சவிலையில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 54 சதவீத ம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தை யிலும் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை முக்கிய ஆதரவு நிலையான 55 டாலருக்கு கீழே இறங்கி உள்ளது.
காரணங்கள்
தொழில்துறையில் வெள்ளிக்கான தேவை குறைந்து வருகிறது
வட்டி விகிதங்கள் உயர்ந்து வரும் சந்தை சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்புமிக்க உலோகங்கள் முதலீட்டை இழக்கின்றன
ஏ.ஐ., துறையில் முதலீடுகள் குறைந்து வருவதால், ’செமிகண்டக்டர்’ உற்பத்தி துறையில் வெள்ளிக்கான டிமாண்டு குறைந்துள்ளது
அமெரிக்கா மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற சந்தையின் எதிர்பார்ப்பு
கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தாண்டியுள்ளது
அமெரிக்க கடன் பத்திரங்களில் எளிதாக அதிக வருமானம் கிடைக்கிறது.
