‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ கோடிகளில் குவிந்த விண்ணப்பங்கள்
‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ கோடிகளில் குவிந்த விண்ணப்பங்கள்
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:06 PM

நாட்டின் மிகப்பெரிய பங்கு வெளியீடான ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐ.பி.ஓ., நேற்றுடன் நிறைவடைந்தது. எனினும், ஐ.பி.ஓ., முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, விண்ணப்பங்கள் ஒரு கோடியை தாண்டின. இதனால், உலகிலேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐ.பி.ஓ., என்ற சாதனையையும் ஜியோ படைத்துள்ளது.
இதற்கு முன் உலகிலேயே அதிக விண்ணப்பங்களை பெற்றது, இந்தியாவை சேர்ந்த ‘வாரீ எனர்ஜீஸ்’ நிறுவனத்தின் ஐ.பி.ஓ., தான். இந்நிறுவனம் 97 லட்சம் விண்ணப்பங்களை பெற்றது. மேலும், ‘பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், பாரத் கோக்கிங் கோல்’ ஆகிய இந்திய நிறுவனங்களும் கிட்டத்தட்ட 90 லட்சம் விண்ணப்பங்களை பெற்றன.
ஜியோ ஐ.பி.ஓ., வெளியீட்டின் இறுதியில், மொத்தம் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 70.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 14 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 2.72 மடங்கு விண்ணப்பங்களும் வந்துள்ளன.
