தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/அன்னிய முதலீடுகளுக்கு எளிமையான விதிமுறைகள்: மக்களிடம் கருத்து கேட்கும் ‘செபி’

அன்னிய முதலீடுகளுக்கு எளிமையான விதிமுறைகள்: மக்களிடம் கருத்து கேட்கும் ‘செபி’

அன்னிய முதலீடுகளுக்கு எளிமையான விதிமுறைகள்: மக்களிடம் கருத்து கேட்கும் ‘செபி’


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை எளிதாக்கும் வகையில், சட்ட விதிகள் மற்றும் ஆவண நடைமுறைகளை சீரமைக்க, ‘செபி’ முடிவு செய்துள்ளது.

தற்போது நிலவும் சிக்கலான விதிமுறைகள் மற்றும் அதிக ஆவண சுமையை குறைத்து, சர்வதேச பங்கு சந்தைகளுக்கு இணையான எளிமையான வழிமுறைகளை கொண்டுவர செபி திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்கு முன்னதாக, சந்தை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்கும் நடவடிக்கையில் செபி இறங்கியுள்ளது.

நன்மைகள் என்ன?



1. விதிகள் எளிமையாக்கப்பட்டால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் அதிக அளவில் நம்பிக்கையுடன் பணத்தை முதலீடு செய்யும்.

2. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் போது, இந்திய பங்குச்சந்தையின் பணப்புழக்கமும் வளர்ச்சியும் அதிகரிக்கும்

3. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனுமதி பெறுவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஆகும் நேரம் கணிசமாக குறையும்.

4. செபியின் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும்பட்சத்தில், இது நவம்பர்-, டிசம்பர் மாதங்களில் சந்தையின் அடுத்த கட்ட ஏற்றத்திற்கு மிக முக்கிய காரணியாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us