டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கத்துக்கான அழுத்தம் சற்று குறைந்திருக்கிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : இறக்கத்துக்கான அழுத்தம் சற்று குறைந்திருக்கிறது
UPDATED : நவ 02, 2026 01:21 AM
ADDED : நவ 01, 2026 11:02 PM

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நிப்டி 27 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து 181 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு பின்னர் இறங்கி நாளின் இறுதியில் 116 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில் 2 ஏற்றத்துடனும் 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.30 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.49 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும், 14 குறியீடுகள் இறக்கத்துடனும் ஒரு குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு அதிகபட்சமாக 2.32 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்விசஸ்' குறியீடு அதிகபட்சமாக 2.24 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்திருந்தது. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,633 நிறுவனங்களின் பங்குகளில் 1,013 ஏற்றத்துடனும், 2,511 இறக்கத்துடனும், 109 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி 20 நாள் (எஸ்.எம்.ஏ.,) மற்றும் 21 நாள் (இ.எம்.ஏ.,) சராசரிகளுக்கு மேலே நிறைவடைந்திருப்பது தற்போதைய மீட்சியானது ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையுடன் நடந்துள்ளது என்பதை உணர்த்துகின்றது. எம்.ஏ.சி.டி., சிக்னல் லைனான -147.35க்கு மேல் -80.66ல் இருப்பதும் 'ஹிஸ்டோகிராம்' 66.70ல் இருப்பதும் இறக்கத்திற்கான அழுத்தம் சற்று குறைந்திருக்கிறது என்பதை குறிக்கிறது.

ஆர்.ஓ.சி., 1.46 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ., 53.50 என்ற அளவிலும் இருப்பது ஓரளவு ஏற்றத்திற்கான மொமெண்டம் இருப்பதை காட்டுகின்றது. டெக்னிக்கலாக எச்சரிக்கையுடன் கூடிய மீட்சி நடைபெறுவது கண்கூடாக தெரிகின்றது. 23,160 மற்றும் 23,255-23,285 போன்ற லெவல்களில் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் உள்ளது. 22,854 மற்றும் 22,707ல் சப்போர்ட் இருக்கின்றது.
கலவையான இந்த டெக்னிக்கல் அடிப்படைதனை கணக்கில் கொண்டு பார்த்தால் நடக்கும் மீட்சிதனை எச்சரிக்கையுடன் கூடிய மீட்சி எனலாமே தவிர உறுதியான 'புல்லிஷ் ரிவர்சல்' என்று கூற முடியாது.
ரெசிஸ்டென்ஸுக்கு மேலே சென்று நிலைத்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்று கூறமுடியும். ஒருவேளை இறக்கம் வந்து சப்போர்ட்டுக்கு கீழே சென்றால் மீண்டும் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ரெசிஸ்டென்ஸுக்கு மேலே சென்று நிலைத்தால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ளது என்று கூற முடியும். ஒருவேளை இறக்கம் வந்து சப்போர்ட்டுக்கு கீழே சென்றால் மீண்டும் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 30-10-26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
பஜாஜ் பைனான்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-20.14 ஆர்.ஓ.சி.,:-4.44 ஆர்.எஸ்.ஐ.,:43.50) 939.10 929 920 948 1, 2, 5
பேங்க் ஆப் பரோடா (எம்.ஏ.சி.டி.,(12,26): 0.20 ஆர்.ஓ.சி.,: 0.07 ஆர்.எஸ்.ஐ.,: 54.63) 238.60 237 235 242 1, 2, 5
கெயில் (இந்தியா) (எம்.ஏ.சி.டி., (12,26): -1.37 ஆர்.ஓ.சி.,: 0.23 ஆர்.எஸ்.ஐ.,: 48.75) 167.91 165 163 171 1, 4, 5
ஜிந்தால் ஸ்டீல (எம்.ஏ.சி.டி., (12,26):-14.12 ஆர்.ஓ.சி.,: 2.86 ஆர்.எஸ்.ஐ.,: 48.83) 1,061.20 1,051 1,040 1,069 6
டாடா பவர் கம்பெனி (எம்.ஏ.சி.டி., (12,26): -4.50 ஆர்.ஓ.சி., : 0.01 ஆர்.எஸ்.ஐ., : 44.82) 345.05 341 338 348 இல்லை
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
