UPDATED : ஆக 02, 2026 02:57 AM
ADDED : ஆக 02, 2026 02:44 AM

நடப்பு மதிப்பீட்டு ஆண்டில், ஜுலை 31ம் தேதி நிலவரப்படி இதுவரை 5.90 கோடிக்கும் அதிகமானோர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என வருமானவரி துறை தெரிவித்துள்ளது.
ஐ.டி.ஆர்., 1 மற்றும் ஐ.டி.ஆர்., 2 படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜுலை 31 ஆகும். அதன் பின் தாக்கல் செய்வோர் அபராத தொகை செலுத்தி தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 16ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அப்போது வரையில், மொத்தம் 7.30 கோடிக்கும் அதிகமானோர் ஐ.டி.ஆர்., தாக்கல் செய்திருந்தனர் என வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கூடுதல் அவகாசம்?
* ஐ.டி.ஆர்., 3 படிவம்: வரித் தணிக்கை தேவையில்லாத தொழில் அல்லது ப்ரீலான்ஸ் வருமானம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம்
![]() |
* ஐ.டி.ஆர்., 4 படிவம்: வரித் தணிக்கை தேவைப்படும் தொழில் அல்லது தொழில்முறை வருமானம் உள்ளவர்கள் அக்டோபர் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம்.

