தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய முதலீட்டாளர்கள் வருகை மந்தம் முதலிடத்தை தக்க வைத்துள்ள 'குரோ'

 புதிய முதலீட்டாளர்கள் வருகை மந்தம் முதலிடத்தை தக்க வைத்துள்ள 'குரோ'

 புதிய முதலீட்டாளர்கள் வருகை மந்தம் முதலிடத்தை தக்க வைத்துள்ள 'குரோ'


UPDATED : ஜூலை 15, 2026 01:48 AM

ADDED : ஜூலை 15, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 01:48 AM ADDED : ஜூலை 15, 2026 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த சில ஆண்டுகளாக 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து வந்த புதிய முதலீட்டாளர்களின் சேர்க்கை, நடப்பு 2026ம் ஆண்டின் முதல் பாதியில் திடீரென மந்தநிலையை சந்தித்துள்ளது.

என்.எஸ்.இ., வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், தற்போது வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெறும் 2.80 லட்சம் மட்டுமே உயர்ந்து, ஜூன் மாத இறுதியில் 4.54 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் 'எப் அண்டு ஓ' வர்த்தக பிரிவில் கொண்டு வரப்பட்ட புதிய கடுமையான ஒழுங்குமுறை விதிகள் காரணமாக, சிறு வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைந்ததே இந்த மந்தநிலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.





புதிய வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால், புரோக்கிங் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ளவும், போட்டி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் கடுமையான போ ட்டியில் இறங்கியுள்ளன.

Image 1598957


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us