தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி குறுகிய எல்லைகளுக்குள் நகர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி குறுகிய எல்லைகளுக்குள் நகர வாய்ப்புள்ளது

டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டி குறுகிய எல்லைகளுக்குள் நகர வாய்ப்புள்ளது


UPDATED : ஜூலை 15, 2026 01:49 AM

ADDED : ஜூலை 15, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 01:49 AM ADDED : ஜூலை 15, 2026 01:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்றைய வர்த்தகத்தில் 143 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய நிப்டி, நாள் முழுதும் இறக்கத்துடனே காணப்பட்டது. வர்த்தக நிறைவில் 158 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிந்தது.

பரந்த சந்தை குறியீடுகள் 18ம் இறக்கத்துடன் காணப்பட்டன.

இவற்றில், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 0.44 சதவீதம் குறைந்தும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 1.08 சதவீதம் இறங்கியும் காணப்பட்டன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத உயர்வுடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.97 சதவீத சரிவுடனும் முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,410 நிறுவனங்களின் பங்குகளில் 1,020 ஏற்றத்துடனும்; 2,277 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி 14, 21 மற்றும் 50 நாள் இ.எம்.ஏ.,க்களுக்கு அருகேயே வர்த்தகமாகி வருவதால், குறிப்பிட்ட திசையில் தீர்மானமாக நகராமல் கன்சாலிடேஷன் நிலைமையே தொடர்கிறது. ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., கிட்டத்தட்ட சமநிலையையும், ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஒரளவுக்கு பாசிட்டிவ்வாகவும், எம்.ஏ.சி.டி., இன்னும் ஏற்றத்திற்கு தேவையான வேகம் உறுதியாகவில்லை என்பதையும் காட்டுகிறது.

Image 1598966


எனவே, மொமென்டம் இண்டிக்கேட்டர்கள் நிப்டியில் கலவையான சிக்னல்களையே வெளிப்படுத்துகின்றன. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,080 - 24,100 என்ற லெவலிலும், உடனடி சப்போர்ட் 24,000 மற்றும் 23,760லும் இருக்கின்றன.

தற்போதைய டெக்னிக்கல் சூழலில், நிப்டி 24,000 - 24,100 வரம்பை உடைத்து ஏதாவது ஒரு திசையில் தீர்மானமான நகர்வை மேற்கொள்ளும் வரை, குறுகிய எல்லைகளுக்குள் ஏற்ற இறக்கங்களுடன் நகரும் வாய்ப்பே அதிகமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us