தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பெரிய லாபத்தை குவித்த 'ஸ்மால் கேப்' பண்டுகள்; ஆறே மாதங்களில் 25% லாபம்

 பெரிய லாபத்தை குவித்த 'ஸ்மால் கேப்' பண்டுகள்; ஆறே மாதங்களில் 25% லாபம்

 பெரிய லாபத்தை குவித்த 'ஸ்மால் கேப்' பண்டுகள்; ஆறே மாதங்களில் 25% லாபம்


UPDATED : அக் 01, 2026 07:08 AM

ADDED : அக் 01, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2026 07:08 AM ADDED : அக் 01, 2026 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 6 மாதங்களில் '36 ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டு'கள் இரட்டை இலக்க வருமானத்தை வழங்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இப்பிரிவின் சராசரி வருமானம் 25.20 சதவீதமாக உள்ளது.

பங்கு சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், ஸ்மால்கேப் பண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது லாபத்தை பதிவு செய்யலாமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து 'பிரைம் இன்வெஸ்டார்' நிறுவனத்தின் பண்டு மேலாளர் பாவனா ஆச்சார்யாவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:

ஸ்மால்கேப் பங்குகளின் முந்தைய சரிவுக்கு பிறகு ஏற்பட்ட மீட்சி மற்றும் நிறுவனங்களின் வலுவான லாப வளர்ச்சி ஆகியவை சமீபத்திய உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை தவிர்த்து, ஸ்மால்கேப் நிறுவனங்களின் லாப வளர்ச்சி 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.

கடந்த ஒரு மாதத்தில் 'நிப்டி 50' குறியீடு சரிந்திருந்தாலும், ஸ்மால்கேப் பங்குகள் அதைவிட குறைவாகவே சரிந்துள்ளன. எனவே, சமீபத்தில் கிடைத்த அதிக வருமானத்தை பார்த்து உடனடியாக லாபத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஈக்விட்டி முதலீடுகளை நீண்ட கால நோக்கில் வைத்திருப்பது முக்கியம். அடிக்கடி போர்ட்போலியோவில் மாற்றங்களை செய்வது நீண்ட கால வருமானத்தை பாதிக்கலாம். எனவே, குறுகிய கால லாபத்துக்காக முதலீடுகளை அடிக்கடி மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

முதலில், மொத்த போர்ட்போலியோவில் ஸ்மால்கேப் முதலீட்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளர் நிர்ணயிக்க வேண்டும். அந்த அளவைவிட முதலீடு அதிகரித்திருந்தால், ஒரு பகுதி லாபத்தை பதிவு செய்யலாம். அதேநேரம், நிர்ணயித்த அளவைவிட முதலீடு குறைவாக இருந்தால், கூடுதலாக முதலீடு செய்வதையும் பரிசீலிக்கலாம்.

குறைந்த ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் போர்ட்போலியோவில் 10 முதல் 15 சதவீதமும், ஓரளவு ரிஸ்க் எடுப்பவர்கள் 20 சதவீதம் வரையும், அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் அதிகபட்சம் 30 சதவீதம் வரையும் ஸ்மால் கேப் பண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்வதை பரிசீலிக்கலாம்.

ஸ்மால் கேப் முதலீடுகளில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருப்பதால், அவற்றை தொடர்ந்து கண்காணிப்பதும் முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடிக்கடி போர்ட்போலியோவில் மாற்றங்களை செய்வது நீண்ட கால வருமானத்தை பாதிக்கலாம். எனவே, குறுகிய கால லாபத்துக்காக முதலீடுகளை அடிக்கடி மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Image 1624847

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us