உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 01, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
ஆ ப்பிள் நிறுவனம் தனது 'ஆப்பிள் பே' சேவைகளை 'ஆக்ஸிஸ் வங்கி'யுடன் இணைந்து, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ஆப்பிள் ஐபோன் மற்றும் வாட்ச் வைத்திருப்பவர்கள், ஆக்ஸிஸ் வங்கியால் வழங்கப்பட்ட 'விசா' மற்றும் 'மாஸ்டர்கார்டு' கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் பே வாயிலாக பயன்படுத்தலாம்.
ஐ.டி., பங்குகள் உயர்வு
அ மெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில், மீண்டும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவு என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், நேற்றைய வர்த்தகத்தில் ஐ.டி., பங்குகள் விலை உயர்ந்தன. நிப்டி ஐ.டி., குறியீடு, கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தது. டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டன.
