
பில்லியன் பிரெய்ன்ஸ் கேரேஜ் வெஞ்சர்ஸ்
இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள பிரபலமான முதலீட்டு தளமான குரோ எனும் பிராண்டை கொண்டு செயல்படும் நிறுவனமாகும். 'மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனம். இந்நிறுவனம் குறித்து 'இந்தியாவின் செல்வத்தை வளர்த்தல்' என்ற தலைப்பில், ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தராக துவங்கி, இன்று பங்குகள், டெரிவேட்டிவ்கள், கடன் மற்றும் சொத்து மேலாண்மை என அனைத்து விதமான முதலீட்டுத் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் ஒரு முழுமையான நிதிச் சேவை மையமாக குரோ வளர்ந்திருப்பதை இந்த அறிக்கை விரிவாக விளக்குகிறது.
எளிமையான வடிவமைப்பு
இ ந்நிறுவனத்தின் வளர்ச்சி பாதையின் திசை, இந்திய மூலதனச் சந்தையில் இன்னும் முதலீடு செய்யாத பெருமளவிலான மக்களைச் சென்றடைவதையே மையமாகக் கொண்டுள்ளது. குரோ செயலியின் எளிமையான வடிவமைப்பு, வெளிப்படையான கட்டண அமைப்பு மற்றும் தடையற்ற பயனர் அனுபவம் ஆகியவை முதல் முறையாக முதலீடு செய்யும் நபர்களை ஈர்க்க உதவுகின்றன.
இந்நிறுவனம், 'பிஸ்டம்' நிறுவனத்தை கையகப்படுத்தியது, சொத்து மேலாண்மைப் பிரிவில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்பட வேண்டும். இந்த கையகப்படுத்தலின் வாயிலாக, மியூச்சுவல் பண்டு ஆலோசனை, பி.எம்.எஸ்., - ஏ.ஐ.எப்., தனியார் ஈக்விட்டி மற்றும் பட்டியலிடப்படாத பத்திரங்கள் போன்ற வற்றை தனது தளத்தில் ஒருங்கிணைக்க முடிகிறது .
ஹைபிரிட் சேவை மாடல்
வ சதி படைத்த மற்றும் உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு துவங்கப்பட்ட 'டபிள்யு' தளம், நிறுவனத் தின் வருவாயைப் பன்முகப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவாக உள்ளது. 2028-ம் நிதியாண்டில், சொத்து மேலாண்மைப் பிரிவு மொத்த வருவாயில், கிட்டத்தட்ட 7 சதவீத பங்களிப்பு பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'பிஸ்டம்' நிறுவனத்தின் 10,000 கோடி ரூபாய்க் கும் மேற்பட்ட அசெட் அண்டர் மேனேஜ்மென்ட் மற்றும் ரிலேஷன்ஷிப் மேனேஜர்களை கொண்ட குழு போன்றவை, டிஜிட்டல் மற்றும் தனிநபர் ஆலோசனை இணைந்த ஒரு ஹைப்ரிட் சேவை மாடலை உருவாக்க உதவுகின்றனர். இதன் வாயிலாக , குரோ-வின் சராசரி பயனர் வருவாய் மற்றும் நீண்டகால லாப வரம்புகள் வலுப்பெறும் வாய்ப்புள்ளது.
கைரேகை அடிப்படையிலான ஓ.டி.பி., போன்ற வசதிகள், சிறு நகரங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நபர்களையும் முதலீடு செய்வதற்கு கொண்டு வர உதவுவதாக இருக்கிறது.
வாங்கலாம் எனும் மதிப்பீடு
மோ திலால் ஓஸ்வால் தனது ஆய்வறிக்கையில், இந்நிறுவனத்துக்கு 'வாங்கலாம்' என்ற மதிப்பீட்டை வழங்கி, அடுத்த 12 மாதங்களுக்கு 185 ரூபாய் என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. (2028 நிதியாண்டில் எதிர்பார்க்கும் பி/இ 28x என்ற அளவில்). குறைந்த செலவு, வருவாய் பன்முகப்படுத்தல் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் ஆகியவை நிறுவனத்தின் வலிமையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், செயல்படும் துறையில் வர வாய்ப்பிருக்கும் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் அதிகரிக்கும் போட்டிச் சூழல் போன்றவை, முக்கிய ரிஸ்க்குகளாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

