தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ திடீர் 'பல்டி' அடித்த பங்கு சந்தை 400 புள்ளிகள் சரிந்த 'சென்செக்ஸ்'

 திடீர் 'பல்டி' அடித்த பங்கு சந்தை 400 புள்ளிகள் சரிந்த 'சென்செக்ஸ்'

 திடீர் 'பல்டி' அடித்த பங்கு சந்தை 400 புள்ளிகள் சரிந்த 'சென்செக்ஸ்'


ADDED : ஏப் 29, 2026 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர் மூன்று நாள் சரிவிலிருந்து ஓரளவு மீண்டெழுந்த பங்கு சந்தை, நேற்று திடீர் 'பல்டி' அடித்து, மீண்டும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் அதன் நேற்றைய உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 416 புள்ளிகள் சரிந்து, 76,887 புள்ளிகளிலும், நிப்டி 97 புள்ளிகள் சரிந்து 23,996 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நிப்டி 24,200 புள்ளிகளை கடந்தால் மட்டுமே மீண்டும் வலுவான முன்னேற்றத்தை காண முடியும்; இல்லையெனில் 23,500 புள்ளிகள் வரை சரிவதற்கான வாய்ப்புகளே அதிகம் என பங்கு சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

3% வரை சரிவை சந்தித்த பொதுத்துறை வங்கி பங்குகள் ரிசர்வ் வங்கியின் இ.சி.எல்., எனும் 'எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு' விதிமுறை, வருகிற 2027 ஏப்., 1ம் தேதி முதல் அமலாக உள்ளதால், வங்கிகளின் நிகர மதிப்பு 5 - 10 சதவீதம் குறையலாம் என 'மேக்குரி' கணித்துள்ளது. இந்த தகவல் வெளியானதும், பொதுத்துறை வங்கி பங்குகள் நேற்று பெரும் சரிவை சந்தித்தன.



சரிவுக்கான முக்கிய காரணங்கள்

 முதலீட்டாளர்கள் நிதி மற்றும் ஐ.டி., துறை பங்குகளை அதிக அளவு விற்று லாபம் ஈட்டியது

 நிப்டி ஒப்பந்தங்கள் காலாவதியாவதால் ஏற்பட்ட கூடுதல் ஏற்ற இறக்கங்கள்

 ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க வாய்ப்பில்லை என்கிற தகவல்

 பொதுத்துறை வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய இ.சி.எல்., விதிமுறைகள் குறித்த செய்தி

 சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 111 டாலராக உயர்ந்ததால், உருவான பணவீக்க அச்சம்

 அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம். நேற்று மட்டும் 1,151 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்

 ஜப்பான், சீனாவின் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டது, இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.

சரிவை சந்தித்த முக்கிய பொதுத்துறை வங்கி பங்குகள் வங்கியின் பெயர் சரிவு சதவீதம் தற்போதைய விலை (ரூபாயில்) யூனியன் பேங்க் ஆப் இந்தியா 3.19% 170 பேங்க் ஆப் பரோடா 2.25% 269 கனரா வங்கி 2.43% 137 எஸ்.பி.ஐ., 1.88% 1,091 பஞ்சாப் நேஷனல் பேங்க் 2.19% 111 பேங்க் ஆப் இந்தியா 2.21% 144



சிட்டி யூனியன் பேங்க் பங்கு 28% வரை உயர வாய்ப்பு காலாண்டு முடிவுகளுக்கு பின் 'சிட்டி யூனியன் பேங்க், எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்குகள் 28 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. 'சிட்டி யூனியன் பேங்க்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிட்டல்' 345 ரூபாயாகவும் (27 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 315 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளன. அதேபோல், 'எல் அண்டு டி., பைனான்ஸ்' பங்கின் இலக்கு விலையை 'எலாரா கேபிடல்' 370 ரூபாயாகவும் (28.5 சதவீதம் உயர்வு), 'சாய்ஸ் புரோக்கிங்' 320 ரூபாயாகவும் கணித்துள்ளன. வலுவான நிதிநிலை மற்றும் கடன் வளர்ச்சி காரணமாக, இந்த இரு பங்குகளும் வரும் நாட்களில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us