தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ மீண்டும் தலைதுாக்கும் போர் பதற்றம் பங்கு சந்தைகள் 2வது நாளாக சரிவு

 மீண்டும் தலைதுாக்கும் போர் பதற்றம் பங்கு சந்தைகள் 2வது நாளாக சரிவு

 மீண்டும் தலைதுாக்கும் போர் பதற்றம் பங்கு சந்தைகள் 2வது நாளாக சரிவு


ADDED : மே 09, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 01:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வா ரத்தின் இறுதிநாளான நேற்று, இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிந்து 77,328 என்ற நிலையிலும், நிப்டி 150 புள்ளிகள் குறைந்து 24,176 என்ற நிலையிலும் முடிந்தன.

மார்ச் காலாண்டு முடிவுகளுக்கு பின், எஸ்.பி.ஐ., பங்குகள் 6.74 சதவீதம் சரிந்தன. 'ஹெச்.டி.எப்.சி., வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

அதேநேரம், 'டைட்டன்' நிறுவனம், தனது நிகர லாபத்தில் 35 சதவீத வளர்ச்சியை பதிவு செய்ததால், அதன் பங்குகள் 4.76 சதவீதம் உயர்ந்தன. 'ஏசியன் பெயின்ட்ஸ், அதானி போர்ட்ஸ், இன்போசிஸ்' ஆகியவையும் லாபத்தில் முடிந்தன.

உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், நிப்டி 24,140 என்ற நிலைக்கு கீழ் சென்றால், மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

வீழ்ச்சிக்கான காரணங்கள்  போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியிருப்பது  எஸ்.பி.ஐ.,யின் 4ம் காலாண்டு லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால், அதன் பங்குகள் 4.5 சதவீதம் வரை சரிந்தன  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது  அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்று வருவதால், சந்தை அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பது  மற்ற ஆசிய பங்கு சந்தைகளிலும் காணப்பட்ட சரிவு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us