தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கவனம் ஈர்த்த பங்குகள்

 கவனம் ஈர்த்த பங்குகள்

 கவனம் ஈர்த்த பங்குகள்


ADDED : செப் 29, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

' டாடா டெலிசர்வீசஸ்' 6% உயர்வு



பங்குச் சந்தைகள் சரிவிலும் 'டாடா டெலிசர்வீசஸ்' நிறுவன பங்கு, நேற்று 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. அதிகரித்த வர்த்தக அளவு, குறுகிய கால வாங்குதல் மற்றும் 'ஷார்ட் கவரிங்' காரணமாக, இந்த உயர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு மாத சராசரியை விட வர்த்தக அளவு கிட்டதட்ட 15 மடங்கு அதிகரித்தது. நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர இழப்பு 325 கோடி ரூபாயில் இருந்து 72.15 கோடி ரூபாயாக குறைந்ததும், பங்குகள் உயர சாதகமாக அமைந்துள்ளது.

'ஹீரோ மோட்டார்ஸ்' 10% சரிவு



சமீபத்தில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் பங்குகள், ஐ.பி.ஓ., விலையை விட 55.70 சதவீதம் உயர்ந்திருந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததே, நேற்று 'லோயர் சர்க்யூட்' நிலைக்கு செல்ல காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக, 82 ரூபாய்க்கு பட்டியலான நிலையில், 127.67 ரூபாய் வரை உயர்ந்திருந்தது.

'ஆக்மோன்ட்' பங்கு 10% உயர்வு



'ஆக்மோன்ட் எண்டர்பிரைசஸ்' நிறுவன பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் 10 சதவீதம் உயர்ந்து, 'அப்பர் சர்க்யூட்' நிலையை எட்டின. இ.ஜி.ஆர்., எனப்படும் மின்னணு தங்க ரசீது வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டத்தில், ஆக்மோன்ட் நிறுவனத்தை என்.எஸ்.இ., முக்கிய கூட்டாளராக இணைத்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் தங்கத்தை மின்னணு ரசீதாக மாற்றி, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் நடைமுறை எளிதாகும்.

பி.எஸ்.இ., பங்கு 30% வீழ்ச்சி



பி.எஸ்.இ., பங்குகள் நேற்று 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தன. மே மாத உச்சமான 4,446.80 ரூபாயில் இருந்து தற்போது 30 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. இந்த பங்கின் எதிர்காலம் குறித்து தரகு நிறுவனங்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. எஸ்.டி.டி., உயர்வு, ஆர்.பி.ஐ.,யின் வங்கி உத்தரவாத விதிகள், முடிவு நேர ஏல முறை ஆகியவை பி.எஸ்.இ.,-க்கு சவால்களாக இருக்கலாம் என தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us