ADDED : நவ 11, 2025 01:36 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,503.50 25,653.45 25,503.50 25,574.35
நிப்டி பேங்க் 57,846.20 58,097.20 57,846.20 57,937.55
நிப்டி
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றம் கண்ட நிப்டி, கடைசியில் நாளின் உச்சியில் இருந்து சிறியதொரு இறக்கத்தை சந்தித்து நாளின் இறுதியில், 82 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 14 ஏற்றத்துடனும், 1 குறியீடு இறக்கத்துடனும், 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி மிட்கேப் செலக்ட் குறியீடு அதிகபட்சமாக 0.60% ஏற்றத்துடனும், நிப்டி டோட்டல் மார்க்கெட் குறியீடு குறைந்தபட்சமாக 0.29% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி மைக்ரோ கேப் 250 குறியீடு, 0.37% இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 துறைசார்ந்த சந்தை குறியீடுகளில் 13 ஏற்றத்துடனும், 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 1.62% ஏற்றத்துடனும், நிப்டி ரியால்டி குறியீடு குறைந்தபட்சமாக 0.04% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
நிப்டி மெட்டல் குறியீடு, அதிகபட்சமாக 1.04% இறக்கத்துடன் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,233 பங்குகளில், 1,501 ஏற்றத்துடனும், 1,634 இறக்கத்துடனும், 98 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி முக்கிய மூவிங் ஆவரேஜ்களுக்கு நடுவே இருப்பதால் திசை தெரியாமல் தடுமாறும் சூழலே நிலவுகிறது எனலாம். சற்று ஓவர்சோல்ட் நிலைமையும் தென்படுவதால், திடீர் ஏற்றங்கள் வந்து போகவும் வாய்ப்புள்ளது. அருகிலுள்ள சப்போர்ட்களை உடைத்து வால்யூமுடன் கீழே சென்றால் மட்டும் ஓரிரு நாட்கள் இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆதரவு 25,500 25,420 25,365
தடுப்பு 25,645 25,715 25,775
நிப்டி பேங்க்
ஆரம்பத்தில் இருந்தே ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், நாளின் இறுதியில் உச்சத்தில் இருந்து கணிசமான இறக்கத்தை சந்தித்து, 60 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஏற்றத்தின் வேகம் குறைந்துவரும் சூழலை பார்க்க முடிகிறது. முக்கிய சப்போர்ட்களை உடைக்காத வரை இறக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனலாம். ஆதரவு 57,820 57,700 57,610
தடுப்பு 58,070 58,200 58,300

