உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 01, 2026 05:39 AM

அ நிறம் | அளவு
ப ங்கு சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் போது சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் வரை உயர்வு கண்டன.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளதால், சர்க்கரை ஆலைகளின் வருவாய் மற்றும் லாப வரம்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வரும் பண்டிகை காலத்தில் சர்க்கரைக்கான தேவை அதிகரிக்கும் என்றும், நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இத்துறை பங்குகள் விலை உயர்வை சந்தித்ததாக கூறப்படுகிறது.
