உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 01, 2026 05:40 AM

அ நிறம் | அளவு
நே ற்றைய வர்த்தகத்தில், அரசு கடன் பத்திரங்களின் விலை கடுமையாக சரிந்தது. இதன் விளைவாக, அரசு கடன் பத்திரங்களின் வட்டி ஆதாயம் அதிகரித்து, 2036ம் ஆண்டு முதிர்வு கொண்ட 6.94 சதவீத அரசு கடன் பத்திரத்தின் வட்டி ஆதாயம் 6.95 சதவீதமாக உயர்ந்தது. கடந்த ஆக., 28-ம் தேதி வர்த்தக முடிவில் இது 6.91 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 90 டாலரை கடந்தது ஆகிய காரணங்களால், நேற்றைய வர்த்தகத்தில் அரசு கடன் பத்திரங்களின் விலை சரிந்ததாக கூறப்படுகிறது.
