தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : டாடா பவர்: வருவாய் இலக்கு ரூ.1 லட்சம் கோடி

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : டாடா பவர்: வருவாய் இலக்கு ரூ.1 லட்சம் கோடி

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : டாடா பவர்: வருவாய் இலக்கு ரூ.1 லட்சம் கோடி


UPDATED : நவ 01, 2026 01:56 AM

ADDED : அக் 31, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 01:56 AM ADDED : அக் 31, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டாடா பவர்' நிறுவனம், மும்பைக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் 1910ல் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில், டாடா குழுமத்துக்கு 46.90 சதவீத பங்குகள் உள்ளன. 2025-26 நிதியாண்டு நிலவரப்படி, நிறுவனத்தின் மின் உற்பத்தி திறன் 16,716 மெகாவாட்டாக இருந்தது. இதில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பசுமை மின்சக்தி வாயிலாக பெறப்படுகிறது.

வளர்ச்சி பாதை

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் டாடா பவரின் வருவாய் 50 சதவீதம் உயர்ந்தது. 'எபிட்டா' கிட்டத்தட்ட இருமடங்காகி, 16,090 கோடி ரூபாயை தொட்டது. அசாதாரண செலவுகளுக்கு முந்தைய நிகர லாபம் இருமடங்குக்கு மேல் அதிகரித்து, 5,212 கோடி ரூபாயை எட்டியது.

• 2020-21ம் ஆண்டில் ஒடிசாவின் நான்கு மின் வினியோக நிறுவனங்களின் 51 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது. நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனங்கள், 2025-26 நிதியாண்டில் 809 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன.

• ஜூலை 2025ல் மூடப்பட்ட முந்த்ரா ஆலை, அரசு உத்தரவால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

• 2021-22ல் ஒரு பங்குக்கு 1.75 ரூபாயாக இருந்த டிவிடெண்டு, 2025-26ல் 2.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டங்கள்

2029-30 நிதியாண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய், 30,000 கோடி ரூபாய் செயல்பாட்டு லாபம் மற்றும் 10,000 கோடி ரூபாய் நிகர லாபத்தை எட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 2026-27ல் மட்டும் 25,000 கோடி ரூபாய் மூலதன செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

முக்கிய திட்டங்கள்

*சோலார் பேனல் உதிரிபாகங்களை தயாரிக்க, ஒடிசாவின் கோபால்பூரில் 6,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலையை நிறுவுதல்

*மகாராஷ்டிராவில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட பிவ்புரி நீரேற்று மின் சேமிப்பு திட்டம் 2029ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது

*பூட்டானில் 'துருக் கிரீன் பவர்' நிறுவனத்துடன் இணைந்து 5,000 மெகாவாட்டுக்கும் மேலான தூய மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன

*தரவு மையங்களுக்கு 2,800 மெகாவாட் அளவிலான மின் வினியோக திட்ட பணிகளை கையில் வைத்துள்ளது.

பாதுகாப்பு அரண்கள்:

• மும்பை, டெல்லி, ஒடிசா போன்ற பெருநகர மற்றும் மாநில அளவிலான மின் வினியோக உரிமங்கள் புதிய போட்டியாளர்கள் எளிதில் நுழைய முடியாத தடைகளாக உள்ளன

• அரசு கொள்முதல் திட்டங்களுக்கு உள்நாட்டு தயாரிப்பு அவசியமாகும் சூழலில், முழுமையான 'சோலார் செல்' உற்பத்தி கட்டமைப்பை கொண்டுள்ளது.

• 1.30 கோடி மின் நுகர்வோர் இருப்பது, சோலார் மற்றும் 'இ.வி., சார்ஜர்' விற்பனைக்கான நேரடி சந்தையை உருவாக்குகிறது.

எதிர்கொள்ளும் சவால்கள்

*முந்த்ரா ஆலைக்கான புதிய கொள்முதல் ஒப்பந்தத்தில் குஜராத் தவிர மற்ற நான்கு மாநிலங்கள் இன்னும் கையெழுத்திடவில்லை. ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான அரசு உத்தரவு வரும் டிசம்பர் 31 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் அல்லது காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால், ஆலை மூடப்படும் அபாயம் உள்ளது.

*கடந்த நிதியாண்டில் செயல்பாட்டு பணப்புழக்கம் பாதியாக குறைந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் மட்டும் 25,000 கோடி ரூபாய் மூலதன செலவு செய்ய திட்டமிட்டுள்ளது.

*நாட்டில் சோலார் பேனல் ஆலைகள் முழுத்திறனில் வெறும் 35-40 சதவீதம் வரை மட்டுமே இயங்குகின்றன. இதனால் பேனல்களின் விலை குறைந்து, லாப வரம்பை பாதிக்கக்கூடும்.

அடுத்தகட்ட நகர்வு

டாடா பவரின் பசுமை மின்சக்தி உள்கட்டமைப்பு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க பலனை தருகிறது. 'ரூப்டாப் சோலார்' மற்றும் பேனல் தயாரிப்பு பிரிவுகள் வலுவான செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. திட்டங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவினாலும், மரபுசாரா திட்டங்களை நிறைவேற்றும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்த்ரா ஆலைக்கு ஒப்பந்தங்கள் வாயிலாக தீர்வு காண்பது, செயல்பாட்டு வருவாயில் நிலவும் ஏற்ற இறக்கங்களை வெகுவாக குறைக்கும்.

சர்வதேச சந்தையில் பேனல் விலை வீழ்ச்சிக்கு மத்தியில், உள்நாட்டு உற்பத்தி பிரிவின் லாப வரம்பு, முந்த்ரா ஒப்பந்த நிலவரம் மற்றும் விரிவாக்க திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவேறுவது ஆகியவற்றை முதலீட்டாளர்கள் தீவிரமாக கண்காணிப்பார்கள்.

வணிகம்


*மின் உற்பத்தி
*மின் வினியோக கட்டமைப்பு
*வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான மின் வினியோகம்
*சோலார் பேனல் தயாரிப்பு



உற்பத்தி திறன் (மெகாவாட்)


அனல் மின்சாரம்: 8,800
நீர் மின்சாரம்: 900
சூரிய மின்சாரம்: 5,400
காற்று மின்சாரம்: 1,300
கழிவு வெப்ப மீட்பு: 400
(கடந்த ஜூன் காலாண்டு முடிவில்)



வணிக பிரிவுகள்


• டிரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிபியூஷன்
(61% வருவாய், 41% இயக்க லாபம்)
• மரபுசாரா எரிசக்தி பிரிவு
(22% வருவாய், 41% இயக்க லாபம்)
• அனல் & நீர் மின்சக்தி
(17% வருவாய், 18% இயக்க லாபம்)
(நிதிநிலை விபரங்கள் 2025-26 அடிப்படையில்)



நிதிநிலை


விபரம் 2021-22 2022-23 2023-24 2024-25 2025-26
வருவாய் 42,576 56,033 61,542 64,502 63,681
செயல்பாட்டு லாபம் 8,191 10,068 12,701 14,468 16,090
நிகர லாபம் 2,156 3,810 4,280 4,775 5,118
செயல்பாட்டு பணப்புழக்கம் 6,693 7,166 12,504 12,680 5,993
நிகர கடன் 39,708 35,328 38,125 44,672 56,122
ஆர்.ஓ.இ., (%) 9.50 12.60 11.30 12.80 11.60



Image 1638791Image 1638793

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us