டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் இன்னும் தொடர்வதற்கான சூழல் உள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் இன்னும் தொடர்வதற்கான சூழல் உள்ளது
UPDATED : அக் 11, 2025 01:08 AM
ADDED : அக் 11, 2025 01:07 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 25,167.65 25,330.75 25,156.85 25,285.35
நிப்டி பேங்க் 56,168.60 56,760.25 56,152.45 56,609.75
![]() |
![]() |
நிப்டி
ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, இறுதிவரை இறங்காமல் சென்று, நாளின் இறுதியில் 103 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிப்டி ஸ்மால்கேப் 50 அதிகபட்சமாக 0.95% ஏற்றத்துடனும்; நிப்டி நெக்ஸ்ட் 50 குறைந்தபட்சமாக 0.24% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 14 ஏற்றத்துடனும்; இரண்டு இறக்கத்துடனும்; ஒன்று மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 1.67%, நிப்டி மீடியா குறைந்தபட்சமாக 0.27% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,151 பங்குகளில் 1,895 ஏற்றத்துடனும், 1,165 இறக்கத்துடனும், 91 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) 24.63, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):60.99 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): 0.46 என இருக்கிறது. ஏற்றம் இன்னும் தொடர்வதற்கான பல சூழல்கள் சார்ட்டில் உருவாகியுள்ளன. 25,350-க்கு மேல் ஸ்ட்ராங்கான அதிக வால்யூமுடன் கூடிய ஒரு ஏற்றம் வந்தால் 25,500 வரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 25,255-க்கு கீழே போகாமல் இருக்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் நிபந்தனை.
ஆதரவு 25,180 25,080 25,015
தடுப்பு 25,355 25,430 25,495
நிப்டி பேங்க்
ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து அதே போக்கில் சென்று, நாளின் இறுதியில் 417 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 165.05, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 66.76 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): 1.98 என்ற அளவில் இருக்கின்றன. டிரெண்ட் புல்லிஷ்ஷான நிலைமையிலிருப்பதும் குறைந்த துாரத்தில் பெரிய அளவிலான தடுப்பு நிலைகள் (ரெசிஸ்டன்ஸ்கள்) இல்லாமல் இருப்பதும், ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது. 56,500-க்கு கீழே செல்லாமல் வர்த்தகமானால் ஏற்றம் சாத்தியம்.
ஆதரவு 56,250 55,895 55,665
தடுப்பு 56,860 57,110 57,345
பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விபரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 10, 2025
நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
டாடா ஸ்டீல் 173.85 -2.57 1,80,85,975 37.43
டாடா மோட்டார்ஸ் 679.15 -1.95 1,60,69,904 53.36
எட்டர்னல் 348.40 2.90 1,59,72,103 49.16
ஐ.டி.சி., 402.50 2.60 1,50,85,738 72.19
பி.இ.எல்., 412.15 2.80 1,38,13,014 51.85
நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
எஸ் பேங்க் 24.02 1.60 55,12,94,320 34.89
சுஸ்லான் எனர்ஜி 54.42 1.25 5,89,87,213 36.29
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட்பேங்க் 74.50 1.05 3,33,34,050 55.43
என்.எம்.டி.சி., 77.15 -1.65 2,45,02,958 40.56
பி.எஸ்.இ., லிமிடெட் 2,379.90 49.70 72,75,253 29.36
நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)
ரெடிங்டன் 287.65 19.05 3,75,30,912 8.27
பிஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் 585.50 32.35 1,40,62,831 16.34
பந்தன் பேங்க் 168.50 5.20 1,03,28,003 47.20
ஐநாக்ஸ் விண்ட் 150.00 3.01 1,00,02,574 29.13
என்.பி.சி.சி., 113.00 -0.65 87,11,474 37.58
நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்
நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை
ஜென்சார் டெக்னாலஜிஸ் 793.65 65.07 5,06,285
கேபின் டெக்னாலஜிஸ் 1,075.00 35.46 9,93,167
பிலாடெக்ஸ் லிமிட்டெட் 53.61 45.30 22,24,937
லாரஸ் லேப்ஸ் லிமிட்டெட் 877.20 32.48 39,85,430
பந்தன் பேங்க் 168.50 47.20 1,03,28,003