டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் நிற்க 23,580ஐ கடக்க வேண்டும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் நிற்க 23,580ஐ கடக்க வேண்டும்
UPDATED : ஜூன் 05, 2026 05:32 AM
ADDED : ஜூன் 05, 2026 02:04 AM

நிப்டி
துவக்கத்தில் இறக்கத்துடன் காணப்பட்ட நிப்டி, வர்த்தகத்தின் இடையே சிறுசிறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. நாளின் இறுதில், 10 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 0.86 சதவீத உயர்வுடனும், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்தபட்சமாக 0.08 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிந்தன.
இவற்றில், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 2.19 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,396 நிறுவனங்களின் பங்குகளில் 1,815 ஏற்றத்துடனும்; 1,471 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
நிப்டிக்கு 23,250-23,300 என்ற புள்ளிகளில் நல்லதொரு சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் ஓரளவுக்கு ஏற்றத்துக்கு சாதகமாக மாறியுள்ள போதிலும் நிப்டி குறுகிய கால சராசரிகளுக்கு கீழேயே நிறைவடைந்துள்ளது.
![]() |
ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., இன்னும் சற்று பலவீனமாக இருப்பதால், டிரெணடு சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஏற்றம் கண்டால் 23,580ல் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸும், இறங்கினால் 23,100ல் நல்லதொரு சப்போர்ட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது.
டெக்னிக்கலாக 23,580க்கு மேலே சென்றால் மட்டுமே இறக்கத்தில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கருத முடியும். மொத்தத்தில் எச்சரிக்கையுடன் கூடிய சிறிய மேல்நோக்கிய நகர்வுதனை நிப்டி எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. 23,680ஐ கடந்து மேலே போகாத வரை டிரெண்டு பியரிஷாக இருப்பதாகவே கணக்கில் கொள்ளவேண்டும்.

