டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டிக்கு வலுவான தடையாக 24,630 உருவெடுக்கிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : நிப்டிக்கு வலுவான தடையாக 24,630 உருவெடுக்கிறது
UPDATED : ஆக 08, 2026 02:21 AM
ADDED : ஆக 08, 2026 02:16 AM

நேற்று 97 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 65 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும்; ஒன்று மட்டும் மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு அதிக பட்சமாக 0.26 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.17 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. 'நிப்டி ஸ்மால்கேப்500' குறியீடு மாற்றம் ஏதுமின்றி முடிந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 8 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிக பட்சமாக 1.84 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பைனான்சியல் சர்விசஸ் எக்ஸ்-பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 1.91 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி மீடியா' குறியீடு மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,468 நிறுவனங்களின் பங்குகளில் 1,684 ஏற்றத்துடனும்; 1,664 இறக்கத்துடனும்; 120 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. குறுகிய கால அளவீட்டில் நிப்டியில் இன்னும் சற்று புல்லிஷ்னெஸ் மீதமிருக்கிறது.
ஆனாலும், 24,620-24,630ல் இருக்கும் ரெசிஸ்டென்ஸை தாண்ட சிரமப்பட வேண்டியுள்ளது. 24,500-ஐ உடனடி சப்போர்ட்டாகவும், 24,630-ஐ ஏற்றம் காண்பதற்கு அவசியம் தாண்டவேண்டிய தடைக்கல்லாகவும் கொள்ளவேண்டியுள்ளது. 24,500-க்கு கீழே சென்றால் 24,365-24,390 என்ற லெவலிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.
![]() |
எம்.ஏ.சி.டி., ஆர்.ஓ.சி., ஆர்.எஸ்.ஐ., போன்றவை காட்டும் ஏற்றத்திற்கான அனுகூலத்தையெல்லாம் தாண்டி குறுகியகாலத்தில் ஏற்றத்திற்கான மொமென்டம் அதிகரிப்பதற்கு தடையாக ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் திகழ்கிறது. 24,500க்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவு எனலாம்.

