டெக்னிக்கல் அனாலிசிஸ் : பெரிய இறக்கம் வருவதற்கு வாய்ப்பு குறைவு
டெக்னிக்கல் அனாலிசிஸ் : பெரிய இறக்கம் வருவதற்கு வாய்ப்பு குறைவு
UPDATED : ஜூலை 08, 2026 12:19 AM
ADDED : ஜூலை 08, 2026 12:16 AM

நேற்று 34 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 31 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 17 இறக்கத்துடனும்; 1 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 500' குறியீடு அதிகபட்சமாக 0.72 சதவீதமும், 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ.,150' குறியீடு குறைந்தபட்சமாக 0.14 சதவீதமும் இறக்கத்துடனும் முடிந்தன.
'நிப்டி மிட்கேப் 50' மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.43 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 1.58 சதவீத இறக்கத்துடனும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,384 நிறுவனங்களின் பங்குகளில் 1,188 ஏற்றத்துடனும்; 2,083 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
![]() |
நிப்டியில் டெக்னிக்கலாக பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை. குறுகிய மற்றும் மத்திம கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிப்டி நிறைவடைந்துள்ளதால், டெக்னிக்கலாக புல்லிஷ் அமைப்பு தொடர்கிறது என்று கூறலாம்.
எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்ற மொமென்டம் இண்டிகேட்டர்களும் ஏற்றத்திற்கு சற்று ஆதரவாகவே உள்ளன. ஸ்டோக்காஸ்ட்டிக் இண்டிகேட்டர் ஓவர் பாட் என்ற நிலைக்கு வந்திருந்தாலும் இறக்கம் வர வாய்ப்புள்ளது என்பதை உறுதி செய்யுமளவிற்கு மாறவில்லை.
தற்போதைய டெக்னிக்கல் நிலைமையில் 24,300க்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதேநேரம், மீண்டும் ஏற்றம் தொடர 24,530 என்ற லெவலுக்கு மேலே நிப்டி செல்ல வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் 24,630 முதல் 24,750 வரையில் நிப்டி செல்லக்கூடும்.
இறக்கம் வந்தால் 24,300ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதையும் தாண்டி இறங்கும் பட்சத்தில் 24,080 - 24,000 போன்ற லெவல்களில் மட்டுமே வலுவான சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்ற குழப்பமான டெக்னிக்கல் சூழல்களில், வழக்கமான டெக்னிக்கல் எதிர்பார்ப்புகள் முழுமையாக நிறைவேறாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

