தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : 22,865க்கு கீழே சென்றால் இறங்குமுகமாக மாறலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 22,865க்கு கீழே சென்றால் இறங்குமுகமாக மாறலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : 22,865க்கு கீழே சென்றால் இறங்குமுகமாக மாறலாம்


UPDATED : அக் 16, 2026 03:44 AM

ADDED : அக் 15, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 03:44 AM ADDED : அக் 15, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி 48 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து உயர்ந்து நாளின் இறுதியில் 374 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும், 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 1.26 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.65 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறைசார் குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும், 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.89 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.55 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,667 நிறுவனங்களின் பங்குகளில் 1,342 ஏற்றத்துடனும், 2,218 இறக்கத்துடனும், 107 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 10 நாள் மற்றும் 20 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளது. இது குறுகிய கால மொமென்டம் மேம்பட்டிருப்பதை காட்டுகிறது. ஸ்டோக்காஸ்டிக் உயர்ந்த நிலையில் இருப்பதால், தற்போதைய ஏற்றத்துக்கு பிறகு குறுகிய காலத்தில் கன்சாலிடேஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Image 1631417



நிப்டி 23,056க்கு மேலே சென்றால் 23,200-23,500 வரை செல்ல வாய்ப்புள்ளது. 50 நாள் (23,320) மற்றும் 200 நாள் (24,022) சராசரிகளுக்கு கீழே நிப்டி இருக்கும் வரை பரந்த அளவிலான டிரெண்டு பலவீனமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே, 22,865க்கு கீழே சென்றால் மீண்டும் குறுகிய கால அளவீட்டிலும் டிரெண்டு இறங்குமுகமாக மாற வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us