தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் :சிறு பின்னடைவுடன் கூடிய ஏற்றம் வரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :சிறு பின்னடைவுடன் கூடிய ஏற்றம் வரலாம்

டெக்னிக்கல் அனாலிசிஸ் :சிறு பின்னடைவுடன் கூடிய ஏற்றம் வரலாம்


UPDATED : நவ 18, 2026 01:00 AM

ADDED : நவ 17, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 01:00 AM ADDED : நவ 17, 2026 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிப்டி, 25,387.40ல் நிறைவடைந்தது. மேலும், அனைத்து முக்கிய சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்துள்ளதுடன், அந்த சராசரிகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதுவே தற்போது நடைபெற்று வரும் ஏற்றத்தின் முக்கிய அம்சமாகும். டிரெண்டு இண்டிக்கேட்டர்களும் ஏற்றம் தொடர்வதற்கு சாதகமான அறிகுறிகளையே தருகின்றன. ஒ.பி.வி., தொடர்ந்து உயர்ந்து வருவது, 'வால்யூம்' ஏற்றத்திற்கு ஓரளவு ஆதரவாக இருப்பதை காட்டுகிறது.

மொமென்டம் குறியீடுகள் ஏற்றத்துக்கு சாதகமாக இருந்தாலும், சமீபத்திய வேகமான ஏற்றத்தால் ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்டிக் இண்டிக்கேட்டர்கள் 'ஓவர்பாட்' நிலையில் உள்ளன. போலிங்கர் பேண்டின் இடைவெளி அதிகரிப்பது, ஏற்ற இறக்கம் சற்று அதிகரித்திருப்பதை காட்டுகிறது. மொத்தத்தில், நடுத்தர காலத்தில் நிப்டியில் ஏற்றத்திற்கு சாதகமான சூழல் தொடர்கிறது.

எனினும், ஓவர்பாட் நிலை காரணமாக நிப்டியில் சிறிய பின்னடைவு வந்து போக வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால், குறுகிய கால சராசரிகள் சப்போர்ட் அளிக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும். அந்த சராசரிகளுக்கு மேலே நிப்டி நீடிக்கும் வரை, ஏற்றத்திற்கு சாதகமான சூழல் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 17.11.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்

பன்சாலி இஞ்சினியரிங் பாலிமர்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-2.17 ஆர்.ஓ.சி., :5.22 ஆர்.எஸ்.ஐ., :45.43) 111.25 110 107 115 5

இஞ்சினியர்ஸ் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :8.86 ஆர்.ஓ.சி., :24.24 ஆர்.எஸ்.ஐ., :64.10) | 311.90 | 308 | 303 | 319 | 2, 5

இந்தியன் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26) :24.44 ஆர்.ஓ.சி., :8.15 ஆர்.எஸ்.ஐ., :68.33) | 936.00 | 926 | 915 | 950 | 2, 5, 6

மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்விசஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-6.82 ஆர்.ஓ.சி., :11.29 ஆர்.எஸ்.ஐ., :49.83) 292.20 286 282 298 6

பூனாவாலா பின்கார்ப் (எம்.ஏ.சி.டி.,(12,26) :11.27 ஆர்.ஓ.சி., :6.27 ஆர்.எஸ்.ஐ., :62.99) 488.80 486 480 497 1, 4, 6

குறுகிய கால சராசரிகளுக்கு மேலே நிப்டி நீடிக்கும் வரை, ஏற்றத்திற்கு சாதகமான சூழல் தொடரும்



Image 1646788

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us