தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடனான ஏற்றம் வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடனான ஏற்றம் வரக்கூடும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : எச்சரிக்கையுடனான ஏற்றம் வரக்கூடும்


UPDATED : ஜூன் 24, 2026 03:13 AM

ADDED : ஜூன் 24, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2026 03:13 AM ADDED : ஜூன் 24, 2026 02:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 31 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, அதிலிருந்து முழுமையாக மீண்டு, பின்னர் 28 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 278 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'ஸ்மால்கேப்50' குறியீடு, குறைந்த பட்சமாக 0.41 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 1.20 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 17 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.08 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி மெட்டல் குறியீடு அதிகபட்சமாக 3.22 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

Image 1591320


வர்த்தகம் நடந்த 3,399 நிறுவனங்களின் பங்குகளில் 1,020 ஏற்றத்துடனும்; 2,280 இறக்கத்துடனும், 99 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. திடீரென வந்த இறக்கம் பியரிஷ் கேண்டிலை உருவாக்கியுள்ளது. நிப்டி பலவீனமாக தென்பட்டாலும் கூட, ஒரு சில குறுகிய கால சராசரிகள் மற்றும் இச்சிமோகு கிளவுடிற்கு (Ichimoku cloud) மேலே நிப்டி நிறைவடைந்துள்ளபடியால், 23,780-க்கு கீழே செல்லாத பட்சத்தில், டெக்னிக்கல் அடிப்படையில் எச்சரிக்கையுடனான ஏற்றத்திற்கான வாய்ப்பு காணப்படுகிறது. மேலும் மொமெண்டம் இண்டிகேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஏற்றத்துக்கு சற்று சாதகமாகவும், ஆர்.எஸ்.ஐ., நடுநிலைமையிலும் இருக்கின்றன. 23,780-ல் வலுவானதொரு சப்போர்ட்டும், 24,000/24,135-ல் வலுவான ரெசிஸ்டென்ஸ்களும் இருக்கின்றன. 23,780-க்கு கீழே சென்றால் 23,630-ல் மட்டுமே வலுவானதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us