தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிசஸ் : 23,800ஐ தாண்டாத வரை ஏறுவது கடினம்

டெக்னிக்கல் அனாலிசிசஸ் : 23,800ஐ தாண்டாத வரை ஏறுவது கடினம்

டெக்னிக்கல் அனாலிசிசஸ் : 23,800ஐ தாண்டாத வரை ஏறுவது கடினம்


UPDATED : செப் 10, 2026 03:31 AM

ADDED : செப் 10, 2026 03:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 03:31 AM ADDED : செப் 10, 2026 03:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேற்று 113 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, சிறு சிறு மீட்சிகளை கண்டு 2 மணிக்கு மேல் தொடர்ந்து இறங்கி நாளின் இறுதியில் 203 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்த பட்சமாக 0.15 சதவீத சரிவுடனும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 0.72 சதவீத வீழ்ச்சியுடனும் முடிவடைந்ததன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 1 குறியீடு ஏற்றத்துடனும்; 20 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிக பட்சமாக 1.79 சதவீதம் அதிகரித்தும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 3.24 சதவீதம் சரிந்தும் காணப்பட்டன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,676 நிறுவனங்களின் பங்குகளில் 1,481 ஏற்றத்துடனும்; 2,092 இறக்கத்துடனும்; 103 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

Image 1617720


நிப்டி நாளின் இறுதியில் முக்கியமான அனைத்து மூவிங் ஆவரேஜ்களுக்கும் (இ.எம்.ஏ.,) கீழே சென்று பியரிஷாகவே முடிவடைந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 23,400 என்பது உடனடி முக்கிய சப்போர்ட்டாக இருக்கிறது. 23,400-க்கு கீழே இறங்கும் பட்சத்தில் 23,300-23,200 வரை செல்வதற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக இருக்கிறது.

ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஸ்டோக்காஸ்ட்டிக் நிப்டி அதிக அளவில் ஓவர் சோல்டாக உள்ளது என்பதையே காட்டுகிறது. இதனால் சிறியதொரு ஏற்றம் வந்துபோவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் 23,800-23,900-க்கு கீழே நிப்டி இருக்கும் வரை பியரிஷ் நிலைமையே நீடிக்கும் எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us