உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 10, 2026 03:18 AM

அ நிறம் | அளவு
எ ன். எஸ்.இ., பங்கு வெளியீட்டின் மதிப்பு 25,000 - 27,000 கோடி ரூபாயாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.எஸ்.இ., நிறுவனத்தின் 6 சதவீத பங்குகள் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட திட்ட மிடப்பட்டிருந்தது.
மேலும், பங்கின் விலை வரம்பு 2,000 - 2,100 ரூபாய் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.பி.ஓ.,வில் ஒரு பங்கின் விலை வரம்பு 1,700 - 1,785 ரூபாயாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஓ.எப்.எஸ்., வெளியீட்டில் சில முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதற்கு தயாராக இல்லை என்று தெரிகிறது. பிற்காலத்தில் இன்னும் நல்ல விலைக்கு பங்குகளை விற்கலாம் என்று அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
