எம்.சி.எக்ஸ்., 'பெர்ன்ஸ்டீன்' நிறுவனம் பரிந்துரை
எம்.சி.எக்ஸ்., 'பெர்ன்ஸ்டீன்' நிறுவனம் பரிந்துரை
ADDED : செப் 10, 2026 03:18 AM

ஈக்விட்டி டெரிவேட்டிவ் வர்த்தகத்தின் அளவு தணிந்து, கமாடிட்டி டெரிவேட்டிவ் வர்த்தகம் அதிகரித்து வருவதால், 'எம்.சி.எக்ஸ்.,' பங்கு உயருவதற்கும், 'பி.எஸ்.இ.,' பங்கு இறங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக, 'பெர்ன்ஸ்டீன்' தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையின் அம்சங்கள்
ஈக்விட்டி டெரிவேட்டிவ் வர்த்தகம் மந்த நிலைக்குள் நுழைகிறது
ஈக்விட்டி ஆப்ஷன் வர்த்தக அளவு குறையும்
சி.ஏ.எஸ்., தாக்கத்தால் ஈக்விட்டி டெரிவேட்டிவ் வர்த்தகம் குறைந்து உள்ளது
வர்த்தக நிறுவனங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது
கமாடிட்டி டெரிவேட்டிவ் வர்த்தகம் வளர்ச்சியின் தொடக்க நிலையில் உள்ளது
எம்.சி.எக்ஸ்., சந்தையில் முந்தைய ஆண்டை விட ஆப்ஷன்ஸ் வர்த்தகம் 4.30 மடங்கும், பியூச்சர்ஸ் வர்த்தகம் 2.10 மடங்கும் உயர்ந்துள்ளது
கமாடிட்டி டெரிவேட்டிவ் பிரிவில் சிறு வர்த்தகர்கள், அன்னிய முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கமாடிட்டி பிரிவில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இடர்கள்
ஒழுங்குமுறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டால், அதற்கு ஏற்ப இரண்டு பங்குகளிலுமே தாக்கம் இருக்கும் என்று பெர்ன்ஸ்டீன் தெரிவித்துள்ளது.
