டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,110க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 23,110க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்
UPDATED : அக் 30, 2026 02:09 AM
ADDED : அக் 29, 2026 11:11 PM

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
22,690.65 22,961.95 22,656.75 22,936.75
சிறியதொரு இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, உடனடியாக ஏற ஆரம்பித்து நாள் முழுவதும் ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 237 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப்500' குறியீடு குறைந்தபட்சமாக 0.64 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 1.08 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளில் 19 குறியீடுகள் ஏற்றத்துடனும், 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு அதிகபட்சமாக 2.75 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,693 நிறுவனங்களின் பங்குகளில் 2,196 ஏற்றத்துடனும், 1,387 இறக்கத்துடனும், 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 9, 21 நாள் சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் 20 நாள் சராசரிக்கு (எஸ்.எம்.ஏ.,) மேலே நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., -164.03 என்ற அளவில் உள்ள சிக்னல் லைனுக்கு மேலே -109.64ல் பாசிட்டிவ் ஹிஸ்டோகிராமுடன் (+54.38) இருப்பது ஏற்றத்திற்கான மொமென்டம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., பூஜ்யத்திற்கு கீழே இருக்கும் சூழலிலும் மொமென்டம் அதிகரித்துள்ளது. 2.56 என்ற அளவில் உள்ள ஆர்.ஓ.சி., ஏற்றத்துக்கு ஆதரவாக உள்ளது. 50.85 என்ற அளவில் இருக்கும் ஆர்.எஸ்.ஐ., நியுட்ரல் முதல் பாசிட்டிவ் மொமென்டம் இருப்பதை குறிக்கிறது. ஸ்டொக்காஸ்ட்டிக் %டி 72.52 என்ற அளவிலும், பாஸ்ட் ஸ்டொக்காஸ்ட்டிக் %கே 95.73 என்ற அளவிலும் இருப்பது குறுகிய காலத்தில் நிப்டியில் உருவான வேகமான ஏற்றம் என்ற எச்சரிக்கையை தருகின்றது. -டி.ஐ.,(14) 24.38 என்ற அளவில் +டி.ஐ.,யான 16.16ஐ விட அதிகமாக இருப்பது இறக்கத்திற்கான திசை சார்ந்த அழுத்தம் வலுவாக இருப்பதைக் குறிக்கிறது. ஏ.டி.எக்ஸ்.,(14) 34.62ல் இருப்பது தற்போதைய போக்கில் வலிமை இருப்பதை காட்டுகின்றது.
இந்த இரண்டையும் இணைத்து பார்க்கும்போது, ஒட்டுமொத்த டெக்னிக்கல் சூழலில் இறக்கத்திற்கு சாதகமான போக்கு இன்னும் நீடிப்பது தெரிகிறது. எனவே, நிப்டியில் குறுகிய கால ஏற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், ஒட்டுமொத்த டெக்னிக்கல் சூழலை கருத்தில் கொண்டால், எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாக உள்ளது. நிப்டி 23,000-23,110க்கு மேலே சென்று நிலைத்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. 22,835க்கு கீழே சென்றால் மீண்டும் பலவீனம் உருவாகி 22,777-22,685 வரை செல்லக்கூடும்.
22,742 22,547 22,430
23,047 23,157 23,274
இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 29.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-6.83 ஆர்.ஓ.சி., :-1.04 ஆர்.எஸ்.ஐ., :42.64) 370 368 361 375 1, 2, 5
பேங்க் ஆப் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :-1.05 ஆர்.ஓ.சி., :1.72 ஆர்.எஸ்.ஐ., :52.00) 135.70 133 130 137 1, 2
சிட்டி யூனியன் பேங்க் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-1.71 ஆர்.ஓ.சி., :-1.85 ஆர்.எஸ்.ஐ., :52.29) 226.90 221 215 231 2, 3, 5
தேவ்யானி இன்டர்நேஷனல் (எம்.ஏ.சி.டி.,(12,26) :-3.43 ஆர்.ஓ.சி., :-1.67 ஆர்.எஸ்.ஐ., :41.70) 121 120 118 124 2, 4, 5, 6
எஞ்சினியர்ஸ் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26) :-8.23 ஆர்.ஓ.சி., :-11.91 ஆர்.எஸ்.ஐ., :42.97) 262.50 260 247 267 2, 5
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
