டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏற்றம் வர சாதகமான செய்திகள் கட்டாயம் தேவை
டெக்னிக்கல் அனாலிசிஸ் ஏற்றம் வர சாதகமான செய்திகள் கட்டாயம் தேவை
UPDATED : செப் 25, 2025 03:26 AM
ADDED : செப் 25, 2025 03:22 AM

![]() |
நிப்டி
ஆ ரம்பத்திலிருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, மதியம் சிறியதொரு மீட்சியை சந்தித்த போதிலும், மீண்டும் இறங்கி, நாளின் இறுதியில் 112 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஐ.டி., துறை மற்றும் வாகன உற்பத்தித்துறை பங்குகளின் இறக்கத்தின் தாக்கத்தால் இறக்கத்துடன் நிறைவடைந்தது. நிப்டி ஆட்டோ குறியீட்டில் உள்ள பங்குகளில், 13 பங்குகள் இறக்கத்தை சந்தித்தன.
நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):18.35 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):1.15, செய்கின் மணி ப்ளோ (21):-0.16 என இருப்பதால், ஏற்றம் வருவதற்கு நிப்டி முதலில் 25,080 என்ற அளவிற்கு மேலே சென்று வர்த்தகம் ஆகவேண்டும். இந்த நிலையை கடக்க முடியாவிட்டால், இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம். இதற்கு செய்திகள் சாதகமாக இருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று.
![]() |
நிப்டி பேங்க்
ஆரம்பத்திலிருந்து தொடர் இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 388 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. இக்குறியீட்டில் உள்ள 12 பங்குகளில் 10 பங்குகள் இறக்கத்தை சந்தித்தன. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 136.24 ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 51.03 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.72 என்ற அளவில் இருக்கும் நிலைமையில், ஏற்றம் வருவதற்கு 55,225 என்ற அளவுக்கு மேலே சென்று வர்த்தகம் நடக்க வேண்டியது அவசியம்.