sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர, சாதகமான செய்திகள் தேவைப்படுகின்றன

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர, சாதகமான செய்திகள் தேவைப்படுகின்றன

டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர, சாதகமான செய்திகள் தேவைப்படுகின்றன

டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர, சாதகமான செய்திகள் தேவைப்படுகின்றன


UPDATED : அக் 09, 2025 01:26 AM

ADDED : அக் 08, 2025 11:56 PM

Google News

UPDATED : அக் 09, 2025 01:26 AM ADDED : அக் 08, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,079.75 25,192.50 25,008.50 25,046.15

நிப்டி பேங்க் 56,098.50 56,303.60 55,821.00 56,018.25

Image 1479633


நிப்டி

சிறிய ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, பெரிய ஏற்றம் வரக்கூடும் என்ற டெக்னிக்கல் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, 11 மணிக்கு மேல் இறங்கி, அதிலிருந்து மீள முடியாமல், நாளின் இறுதியில் 62 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16- குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்கேப் செலக்ட் அதிகபட்சமாக 0.80% இறக்கத்துடனும்; நிப்டி 0.25% குறைந்தபட்ச இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 15 குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டி ரியால்ட்டி குறியீடு, அதிகபட்சமாக 1.83 சதவிகித அளவுக்கு இறக்கத்தை சந்தித்தது. நிப்டி ஐடி (1.50%) மற்றும் கன்ஸ்யுமர் டியுரபிள்ஸ் (0.87%) குறியீடுகள் மட்டும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,207 பங்குகளில், 1,248 ஏற்றத்துடனும்; 1,863 இறக்கத்துடனும்; 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) -0.32, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,): 53.75 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): -1.11 என இருக்கிறது. 25,085 புள்ளிகளு-க்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகமானால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. பெரிய மாற்றம் இல்லாமலோ; அல்லது, சிறிய ஏற்றம் காணவோ வாய்ப்புள்ளதைப் போன்ற டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றம் வரலாம்.

Image 1479675


ஆதரவு 24,970 24,895 24,825

தடுப்பு 25,155 25,265 25,335

நிப்டி பேங்க்

நிப்டியைப் போலவே, நிப்டி பேங்க்-கும், நாள் முழுவதும் இறக்கத்திலேயே பயணித்து, நாளின் இறுதியில் 221 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 143.68, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 60.96 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 1.01 என்ற அளவில் இருக்கின்றன. 56050- புள்ளிகளுக்கு மேலே சென்று தொடர்ந்து வர்த்தகமானால் மட்டுமே, ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆதரவு 55,790 55,560 55,375

தடுப்பு 56,270 56,525 56,710

பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும்.



இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 8, 2025

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 172.20 0.77 2,26,62,699 37.76

எட்டர்னல் 341.15 3.30 1,67,99,915 62.83

டாடா மோட்டார்ஸ் 680.30 -17.75 1,65,68,975 46.60

எச்.டி.எப்.சி., பேங்க் 977.20 -5.30 1,59,39,710 61.30

என்.டி.பி.சி., லிமிட்டெட் 334.00 -4.00 1,32,23,442 73.64

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.05 -0.17 9,68,92,054 45.98

சுஸ்லான் எனர்ஜி 52.90 -1.11 6,04,53,406 50.43

என்.எம்.டி.சி., லிமிட்டெட் 76.30 0.21 2,16,57,726 45.62

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 71.87 -0.12 2,05,47,425 36.77

அசோக் லேலண்டு 139.05 -0.78 1,08,13,847 56.93

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

கரூர் வைஸ்யா பேங்க் 225.00 6.43 1,09,15,802 49.04

ஐநாக்ஸ் விண்டு 140.70 1.32 69,27,996 52.47

பந்தன் பேங்க் 160.73 -3.74 68,21,084 50.50

என்.பி.சி.சி., (இந்தியா) 110.80 -1.82 56,10,463 34.61

அஸ்டர் டி.எம்., ஹெல்த்கேர் 695.70 34.10 49,39,510 20.81

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

அஸ்ட்ரா மைக்ரோவேவ் 1,134.00 26.19 9,72,799

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் 1,495.00 59.59 10,23,522

பி.சி.பி.எல்., கெமிக்கல் 388.00 29.83 14,38,006

டைட்டன் கம்பெனி 3,565.00 41.13 45,31,362

விப்ரோ லிமிட்டெட் 244.00 40.69 73,60,563






      Dinamalar
      Follow us