தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சி தொடர 23,363ஐ கடந்து மேலே செல்ல வேண்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சி தொடர 23,363ஐ கடந்து மேலே செல்ல வேண்டும்

டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சி தொடர 23,363ஐ கடந்து மேலே செல்ல வேண்டும்


ADDED : செப் 18, 2026 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

17-09-2026

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி 50 (எண்ணிக்கை)

டாடா ஸ்டீல் 187.29 4.29

எட்டர்னல் 322.35 5.35

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 713.00 -8.50

ஐ.டி.சி., 266.20 2.05

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 229.30 4.46

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

எஸ் பேங்க் 23.13 -0.27

சுஸ்லான் எனர்ஜி 42.54 0.39

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 86.33 1.32

என்.ஹெச்.பி.சி., 75.20 -0.21

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 95.04 2.58

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

டாடா கெமிக்கல்ஸ் 774.65 42.85

ரெடிங்டன் 401.50 13.35

ஐநாக்ஸ் விண்டு 74.10 -0.40

கேஸ்ட்ரால் இந்தியா 191.70 2.86

ஹிந்துஸ்தான் காப்பர் 486.20 4.60

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 429.20 18.60

ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் லைப் 490.50 20.50

லெஷ்மி ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் 178.99 7.26

பி.சி.பி.எல்., கெமிக்கல் 330.60 13.50

டாடா பவர் 369.00 8.60

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,195.25 23,363.55 23,193.65 23,270.60

நேற்று 22 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி உடனடியாக ஏற்றம் கண்டு பின்னர் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து நாளின் இறுதியில் 53 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.96 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.39 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 18 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.66 சதவீத உயர்வுடனும், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.42 சதவீத சரிவுடனும் முடிவடைந்தன. என்.எஸ்.இ.,-யில் வர்த்தகம் நடந்த 3,651 நிறுவனங்களின் பங்குகளில் 2,262 ஏற்றத்துடனும்; 1,279 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

முக்கிய சராசரிகளுக்கு (14, 21, 50, 100 மற்றும் 200 நாள் இ.எம்.ஏ.,க்கள்) கீழே நிறைவடைந்துள்ளதால் டெக்னிக்கலாக நிப்டி இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறது. இச்சிமோகு இண்டிக்கேட்டரில் நிப்டி டென்கன் - சென் (23,560) மற்றும் கிஜின் சென் (23,794) அளவிற்கு கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய கால இச்சிமோகு செட் அப் பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.

இருப்பினும், ஆர்.எஸ்.ஐ., 29.95 என்ற அளவிலும், ஸ்டோக்காஸ்ட்டிக் 17.90 என்ற அளவிலும் இருப்பது நிப்டி ஓவர்சோல்டு நிலைக்கு அருகில் இருப்பதை காட்டுகிறது. மேலும் ஸ்டோக்காஸ்ட்டிக் %கே 32.41 என்ற அளவிலும், %டி 17.90 என்ற அளவிலும் இருப்பது மிக குறுகியகால அளவீட்டில் மொமென்டம் சற்று முன்னேற்றம் கண்டிருப்பதை காட்டுகிறது.

நிப்டி 23,363-ஐ கடந்து சென்றால் மட்டுமே தற்போது நடைபெறும் மீட்சி தொடர வாய்ப்புள்ளது. 23,116-க்கு கீழே சென்றால் மீண்டும் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது.

ஆதரவு 23,190 23,105 23,040

தடுப்பு 23,360 23,445 23,510

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us