டெக்னிக்கல் அனாலிசிஸ் : சப்போர்ட்டுக்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்துக்கு சாதகம்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : சப்போர்ட்டுக்கு மேலே இருக்கும் வரை ஏற்றத்துக்கு சாதகம்
UPDATED : நவ 16, 2026 02:44 AM
ADDED : நவ 16, 2026 02:42 AM

நிப்டி 25,144ல் நிறைவடைந்து, முக்கிய நகரும் சராசரிகளுக்கு மேலே நீடிப்பது ஒட்டுமொத்த ஏற்றப்போக்கு வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.
'அடாப்டிவ் ஆர்.எஸ்.ஐ., ஏற்றத்துக்கு சாதகமான நிலையை உணர்த்துகிறது. அதேநேரத்தில், ஆர்.எஸ்.ஐ., சந்தை 'ஓவர்பாட்' நிலையில் இருப்பதை காட்டுகிறது. ஆர்.ஓ.சி., அண்மைக்கால ஏற்றத்தின் வேகத்தை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், ஸ்டோகாஸ்டிக் குறியீடுகள் ஏற்றத்தின் வேகம் குறைந்து வருவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன. டி.ஐ., குறியீடுகள் வாங்கும் வேகம் அதிகமாக இருப்பதையும், ஏ.டி.எக்ஸ்., ஏற்றத்தின் வலிமையையும் காட்டுகின்றன.
இந்த டெக்னிக்கல் சூழலில் சமீபத்திய உச்சத்தை தாண்டினால் (25,424)
நிப்டியில் ஏற்றம் மேலும் தொடர வாய்ப்புள்ளது. எனினும், அதிகரித்துள்ள ஆர்.எஸ்.ஐ., மற்றும் குறுகிய கால ஏற்ற வேகத்தில் ஏற்பட்டு உள்ள சரிவு போன்றவற்றின் காரணமாக நிப்டி ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நகரவோ அல்லது லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கில் விற்பனை நடக்கவோ வாய்ப்புள்ளது. உடனடி சப்போர்ட் லெவல்களுக்கு (25,050-24,950) மேலே நிப்டி நீடிக்கும் வரை ஒட்டுமொத்த டெக்னிக்கல் நிலைமையும் ஏற்றத்திற்கு சாதகமாகவே இருக்கும்.
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு
5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு
5 நாளில் விலை அதிகரிப்பு
அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

