தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் டி.சி.எஸ்.,

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் டி.சி.எஸ்.,

ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் டி.சி.எஸ்.,


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான ‘டி.சி.எஸ்.,’ நிறுவனம், உலகின் தலைசிறந்த ஐ.டி., மற்றும் வணிக ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 2025 –2026ம் நிதியாண்டில் 30 பில்லியன் டாலர் (ரூ.2.78 லட்சம் கோடி) வருவாய் என்ற சாதனையை படைத்துள்ளது.

நிலை

சர்வதேச அளவில் ஐ.டி., துறை இரண்டு பெரிய மாற்றங்களை எதிர்கொள்கிறது. முதலில், ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியால், நேரத்தை கணக்கிட்டு கட்டணம் பெறும் பழைய முறை மாறி, பணி முடிவை அடிப்படையாக கொண்ட ஒப்பந்தங்கள் முன்னிலை பெறுகின்றன. இரண்டாவது, ‘ஜி.சி.சி.,’ மையங்கள் வாயிலாக, பெருநிறுவனங்கள் முக்கிய தொழில்நுட்ப பணிகளை ‘அவுட்சோர்சிங்’ செய்யாமல் உள்நிறுவன பணிகளாகவே மாற்றி வருகின்றன.

வளர்ச்சி

கொரோனா காலத்திற்கு பின் ஐ.டி., சேவைகளுக்கான தேவை இயல்பு நிலைக்கு திரும்பியதும், நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைந்தது. கடந்த 2023 முதல் 2026 வரையிலான நிதியாண்டுகளில், வருவாய் வளர்ச்சி ரூபாய் மதிப்பில் 6 சதவீதமாகவும், டாலர் மதிப்பில் 2.40 சதவீதமாகவும் பதிவானது. சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அதிக வட்டி விகிதங்களால், வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களை தவிர்த்துவிட்டு, செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்தினர்.

புதிய ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் தாமதம், பழைய திட்டங்களின் அளவு குறைந்தது மற்றும் நீண்டகால ஒருங்கிணைப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றால் ஆர்டர்கள் வருவாயாக மாறும் வேகம் குறைந்துள்ளது. 2023 – 2026 காலகட்டத்தில் டாலர் மதிப்பில் ஆர்டர் புத்தக மதிப்பு 6.10 சதவீதம் வளர்ச்சியடைந்த போதிலும், வருவாய் வளர்ச்சி 2.40 சதவீதமாக மட்டுமே இருந்தது.

நிறுவனங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கு முன்பு, ‘கிளவுட் மைக்ரேஷன், தரவு நவீனமயமாக்கல், செயலிகள் நவீனமயமாக்கல்’ போன்ற அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய பணிகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணையாக உள்ளன.

தாக்கம்

மென்பொருள் உருவாக்கத்தில் ஏ.ஐ., பயன்பாட்டால் தற்போது உற்பத்தி திறன் 10–15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது விரைவில் 20–25 சதவீதம் வரை உயரும் என நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் லாபத்தன்மை ஓரளவு சீராக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.ஐ., பயன்பாடு சோதனை நிலையிலிருந்து முழுமையான செயல்பாட்டு நிலைக்கு நகர்ந்துள்ளது. ஏ.ஐ., சேவைகள் வருவாய் கடந்த செப்., காலாண்டில் 19 சதவீத காலாண்டு வளர்ச்சியுடன் 3.10 பில்லியன் டாலராக (ரூ. 28,737 கோடி) உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 10 சதவீதம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதுடன், நிறுவனத்தின் சரா சரி லாப வரம்பை விட அதிக லாபத்தை ஈட்டி தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாற்றம்

நிறுவனங்களை கையகப்படுத்துவதில் தயக்கம் காட்டி வந்த டி.சி.எஸ்., இனி நிறுவனங்களை வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தவுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் உள்நிறுவன ஐ.டி., பிரிவுகள் மற்றும் ஜி.சி.சி., மையங்களை வாங்கி, பின்னர் அந்த நிறுவனங்களுக்கே நீண்ட கால ஐ.டி., சேவைகளை வழங்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஜெர்மனியின் ‘போர்ஷே’ நிறுவனத்தின் ஐ.டி., பிரிவை 3,574 கோடி ரூபாய்க்கு டி.சி.எஸ்., வாங்கியது. அத்துடன், ‘ஏ.ஐ., மொபிலிட்டி’ மையம் அமைக்க போர்ஷேவுடன் 5 ஆண்டு ஒப்பந்தமும் செய்துள்ளது. கடந்த அக்டோபரில், ‘பெஸ்ட் பை’ நிறுவனத் தின் இந்திய ஜி.சி.சி., மையத்தை டி.சி.எஸ்., கையகப் படுத்தியது. இது ஏ.ஐ., மையமாக மாற்றப்படும்.

மதிப்பீடு

சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும், கடந்த செப்., காலாண்டில் நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு 1.1 சதவீதம் உயர்ந்து 9.6 பில்லியன் டாலராக (ரூ.88,992 கோடி) உள்ளது. வரும் காலங்களிலும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதோடு, வங்கி துறை மற்றும் வட அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளில் வளர்ச்சியை தக்கவைக்க வேண்டிய அவசியம் உள்ளது. பங்குதாரர்களுக்கு வழங்கும் ஈவுத்தொகை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய பங்கு மதிப்பீடும் நியாயமான அளவில் உள்ளது.

ஏ.ஐ.,க்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், எதிர்காலத்தில் ஐ.டி., சேவைகளுக்கான ஆர்டர்களாக மாறும். ஆனால், பாரம்பரிய சேவைகளில் ஏற்படும் சரிவை ஈடுகட்டும் அளவிற்கு இவை வளர கால அவகாசம் தேவைப்படும். வாடிக்கையாளர்கள் மீண்டும் செலவை அதிகரிக்கும்போது, டி.சி.எஸ்., நிறுவனத்தின் வளர்ச்சியும், மதிப்பும் வேகமெடுக்கும். பெரும்பாலான பின்னடைவுகளை சந்தை ஏற்கனவே எதிர்கொண்டுவிட்டதால், தற்போது முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

செப்., காலாண்டு செயல்பாடு

வருவாய் $7,642 மில்லியன் (70,841 கோடி ரூபாய்) (2.8% )

நிகர லாபம் ர 13,884 கோடி (15% )

செயல்பாட்டு லாபம் ர 17,553 கோடி (லாப விகிதம் 24%)

ஒரு பங்குக்கான வருமானம் ர 38.40

நிதியாண்டு செயல்பாடு (ரூ.கோடியில்)

விபரம் : 2022-23 : 2023-24 : 2024-25 : 2025-26

வருவாய் : 2,25,458 : 2,40,893 : 2,55,324 : 2,67,021

செயல்பாடு லாபம் : 57,686 : 62,775 : 66,127 : 71,240

நிகர லாபம் : 42,303 : 46,099 : 48,797 : 49,454

லாப விகிதம் (%) : 19 : 19 : 19 : 19

ஆர்.ஓ.இ., (%) : 47 : 51 : 53 : 48

பி/இ விகிதம் : 28 : 31 : 27 : 15

டிவிடெண்டு யீல்டு (%) : 3.60 : 1.90 : 3.50 : 2.70

56


நாடுகள்
194
சேவை மையங்கள்
5,98,056
பணியாளர்கள்
ர 2.67 லட்சம் கோடி
வருவாய்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us