டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கல்கள் இறக்கத்தையே காட்டுகின்றன
டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கல்கள் இறக்கத்தையே காட்டுகின்றன
UPDATED : செப் 01, 2026 05:52 AM
ADDED : செப் 01, 2026 05:42 AM

நேற்று 58 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி 180 வரை இறங்கி பின்னர் ஓரளவுக்கு மீண்டு நாளின் இறுதியில் 95 புள்ளிகள் குறைந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 4 குறியீடுகள் உயர்வுடனும்; 14 குறியீடுகள் சரிவுடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.47 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டிஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 0.77 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 8 குறியீடுகள் அதிகரித்தும்; 13 குறியீடுகள் இறங்கியும் முடிந்தன.

இவற்றில், 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு அதிக பட்சமாக 0.97 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 2.84 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,641 நிறுவனங்களின் பங்குகளில் 1,340 ஏற்றத்துடனும்; 2,202 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 14, 21, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்துள்ளது.
எனவே, நிப்டி இருக்கும் டெக்னிக்கல் சூழல் பக்கவாட்டு நகர்வு அல்லது இறக்கம் என்ற இரண்டிற்கான வாய்ப்பையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., (14) நடுநிலைமையான 50-க்கு கீழாக 43.70 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் -36.62 என்ற அளவிலும் இருப்பது இறக்கத்திற்கான மொமென்டம் இருப்பதையே காட்டுகிறது.
ஆர்.ஓ.சி.,(12)யும் -1.29 என்ற அளவில் நெகட்டிவ்வாகவே உள்ளது. ஸ்டோக்காஸ்ட்டிக் மட்டும் சிறிது ஓவர் சோல்டு என்ற நிலைமையை காட்டுகிறது.
உடனடி சப்போர்ட் 24,000 என்ற லெவலில் இருக்கிறது. உடனடி ரெசிஸ்டென்ஸ் 24,250ல் இருக்கிறது. 24,250ஐ கடந்து மேலே சென்றால் 24,330-24,390 வரை செல்ல வாய்ப்புள்ளது. 24,250க்கு கீழே இருக்கும் வரை எச்சரிக்கையுடன் கூடிய பியரிஷ் நிலைமையும், 24,390க்கு மேலே சென்றால் நிப்டியின் டிரெண்டில் ஓரளவு மாறுதலும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
