டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் : மீட்சிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது
UPDATED : அக் 24, 2026 02:36 AM
ADDED : அக் 23, 2026 11:06 PM

ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
22,742.20 22,787.25 22,372.00 22,600.00
நிப்டி 54 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி, பின்னர் இறங்க ஆரம்பித்து அதிக பட்சமாக -315 என்ற அளவிற்கு இறங்கி பின்னர் மீட்சி கண்டு நாளின் இறுதியில் 87 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு குறைந்தபட்சமாக 0.73 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 3.15 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறைசார் குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு குறைந்தபட்சமாக 0.27 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மிட்ஸ்மால் பைனான்சியல் சர்விசஸ்' குறியீடு அதிகபட்சமாக 2.78 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,724 நிறுவனங்களின் பங்குகளில் 623 ஏற்றத்துடனும், 3,011 இறக்கத்துடனும், 90 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய காலத்தில் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது. ஆர்.எஸ்.ஐ., நடுநிலையான 50க்கு கீழே 42.38 என்ற அளவிலும், ஆர்.ஓ.சி., -0.77 என்ற அளவிலும் இருப்பது நெகட்டிவ் மொமென்டம் இருப்பதை உணர்த்துகிறது. எம்.ஏ.சி.டி., -162.47 என்ற அளவில் இருந்தாலும் சிக்னல் லைனுக்கு (-213.21) மேலே இருப்பது ஏற்கனவே இருந்ததை விட இறக்கத்திற்கான மொமென்டம் குறைந்திருப்பதை காட்டுகிறது.
ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் 30.25 என்ற அளவிலும், அதன் சராசரி 47.67 (எஸ்.எம்.ஏ.,) என்ற அளவிலும் இருப்பது குறுகிய கால மொமென்டம் பலவீனமடைந்திருப்பதை காட்டுகிறது. இந்த டெக்னிக்கல் சூழலில் 22,450-22,500 என்ற சப்போர்ட் லெவலுக்கு கிழே சென்றால் மேலும் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நிப்டி 22,854க்கு மேலே சென்று நிலைபெற்றால் மட்டுமே ஏற்றத்திற்கான அறிகுறி தென்பட ஆரம்பிக்கும். அதுவரை இறக்கத்திற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
ஆதரவு 22,386 22,171 22,013
தடுப்பு 22,801 23,002 23,160
26.10.2026 அன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள்
நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 23.10.26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
ஏசியன் பெயிண்ட்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-46.40 ஆர்.ஓ.சி., :-4.83 ஆர்.எஸ்.ஐ., :37.20) 2,307.00 2,276 2,244 2,323 2, 5
பேங்க் ஆப் பரோடா (எம்.ஏ.சி.டி.,(12,26):-0.73 ஆர்.ஓ.சி., :-1.00 ஆர்.எஸ்.ஐ., :44.13) 230.90 227 224 235 இல்லை
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எம்ஏசிடி(12,26):9.89 ஆர்.ஓ.சி., :4.89 ஆர்.எஸ்.ஐ., :52.85) 1,473.00 1,422 1,369 1,481 இல்லை
கிரான்யூல்ஸ் இந்தியா (எம்.ஏ.சி.டி.,(12,26):-12.50 ஆர்.ஓ.சி., :-5.14 ஆர்.எஸ்.ஐ., :39.37) 793.45 782 770 813 இல்லை
ஜைடஸ் லைப் சயின்சஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-6.33 ஆர்.ஓ.சி., :-2.60 ஆர்.எஸ்.ஐ., :47.36) 1,129.40 1,118 1,106 1,142 1, 4
டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள்
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு
(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு
(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்

அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
PULLOUTநிப்டி 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே நிறைவடைந்திருப்பது குறுகிய காலத்தில் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது
